Jul 20, 2010

yi yi - Taiwan \ திருமணம் To திருமரணம்


yi yi


தாய்வான் நாட்டு சிறுகதை தொகுப்பு...
இயக்கம் எட்வர்ட் யாங்க்
திருமணத்தில் துவங்கி திருமரணத்தில் முடிவடைகிறது இப்படம்.
திருமரணம் என்று குறிப்பிட்டதற்க்கு விடை.... படத்தில் ...........
வாழ்வின் இன்பதுன்பங்களை அங்கதச்சுவையோடு காட்சிபடுத்தி இருக்கிறார் இயக்குனர்.முதல்காட்சி திருமணமாக அமைத்து முக்கிய கதாபாத்திரங்களை
அறிமுகப்படுத்திவிடுகிறார். [ இதே உத்தி காட்பாதரில் கொப்பல்லோ கையாண்டிருப்பார் ]
எத்தனை கதாபாத்திரங்கள்??????????
தாய்வான் டெலிபோன் டைரக்டரி ஜெராக்ஸ் எடுத்து இறக்கி விட்டு,
ஒவ்வொருவருக்கும் ஒரு கதை... so.... ஏகப்பட்ட சிறுகதை.
ஒன்று சுஜாதா
ஒன்று ஜெயமோகன்
ஒன்று சாருநிவேதிதா
அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் நடமாடும் அனைவரும் நம்மை மிரட்டுகின்றனர்...
உருக வைக்கின்றனர்....கலவரப்படுத்துகின்றனர்..
தலைவாழ்ஐ இலை போட்டு பிஸா..பர்கர்...பரிமாறச்சொல்லும் கலந்து கட்டி கலாச்சாரத்தில் உழல்வதை நச்சென்று போட்டு தாக்கியிருக்கிறார் இயக்குனர்.
எல்லா வேதனைகளுக்கிடையிலும் கட்டுப்பாடான தன்னம்பிக்கையோடு ஜெயிப்பதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
யாருமே கதாநாயகன்..நாயகி...என இனம் காட்டப்படவில்லை.
ஒரளவுக்கு கதாநாயகன் போல் உலவி வரும் சிறுவன் நம்மை வசியப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறான்
இயக்குனரது பரிவாரங்கள் நம்மை நயவஞ்சகமாக வசீகரிப்பதில் போட்டி போட்டு வென்றிருக்கிறார்கள்.
இப்படம் பிடிக்கவில்லையென்றால் நல்லதா நாலு டிவிடி என் சிபாரிசு
1 பெண்சிங்கம்
2 சுறா
3 அசல்
4 கந்தசாமி

3 comments:

  1. //இப்படம் பிடிக்கவில்லையென்றால் நல்லதா நாலு டிவிடி என் சிபாரிசு
    1 பெண்சிங்கம்
    2 சுறா
    3 அசல்
    4 கந்தசாமி //

    அங்கதான் வெச்சீங்க பன்ச்சை !! ;-)

    ReplyDelete
  2. கருந்தேள் மாதிரி கொட்டணும்னு .....ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

    ReplyDelete
  3. add Manmathan Ambu and Dasavaratharam to the list

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.