Nov 24, 2010

El Violin-புரட்சி கீதம்[2005]


எல் வயலின் மிகச்சிறிய படம்.ஆனால் மிகச்சிறந்த படம்.மெக்சிகோவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் கதை நிகழும் நாடு எது என்று சுட்டிக்காட்டவில்லை.இதனாலேயே இப்படத்தை பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டோடும் பொருத்தி பார்க்க முடியும்.இலங்கை என்றால் இலங்கை .....பர்மா என்றால் பர்மா.சொந்த நாட்டு ராணுவத்தாலேயே பழி வாங்கப்படும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இப்படத்தை அர்ப்பணித்துள்ளார் இயக்குனர் Francisci Vargas

படத்தின் டைட்டில் காட்சியிலேயே ராணுவத்தின் வன்முறை தொடங்கி விடுகிறது.ஆண்களுக்கு அடி உதை...பெண்களுக்கு வன் புணர்ச்சி..அதிர்ச்சிமிக்க இக்காட்சிகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க வருகிறது ஒரு வயலின் இசை.
Don Plutarco ஊனமுற்ற தனது ஒரு கையில் வயலின் போவைக்கட்டிக்கொண்டு அற்ப்புதமான இசையை தானமாக வழங்குகிறார்.மகன் கிடார் இசைக்க.... பேரன் பொதுமக்களிடம் கையேந்தி பணத்தை சன்மானமாக பெறுகிறான்.கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தது இதற்க்காகவா???????மகன் கெரில்லாப்போராளிகளில் ஒருவன் என்பதும் ஆயுதம் வாங்க வந்திருப்பதும் அடுத்தடுத்த காட்சிகள் புலப்படுத்துகின்றன.திரும்பி கிராமத்துக்கு வரும்போது எதிரில் கிராமமே காலியாகி ஒடி வந்து கொண்டு இருக்கிறது.ராணுவம் அந்த மலை கிராமத்தை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது. டான் ப்ளுட்டார்க்கோவின் மருமகள்,பேத்தி உட்ப்பட பெரும்பாலோர் ராணுவத்தால் இழுத்து செல்லப்படுகின்றனர்.டானின் போராளி மகன் தப்பித்து போராளிக்குழுவினரோடு கலக்கிறான்.

டான் பக்கத்து கிராமத்து பணக்காரனிடம் நிலத்தை அடமானமாக வைத்து ஒரு கோவேறு கழுதையை பெற்று வருகிறார்.தனது வயலினை மட்டும் எடுத்துக்கொண்டு கிராமத்தை ஆக்கிரமித்திருக்கும் ராணுவத்தினரை சந்திக்க கழுதை மேல் சவாரி செய்து வருகிறார்.ராணுவம் கைது செய்து கேப்டன் [விஜயகாந்த் அல்ல]முன்னால் நிறுத்துகிறது.
எதற்க்கு வந்தாய்?
என் சோளக்காடு அறுவடைக்கு காத்திருக்கிறது.பாராமரிக்க வந்தேன்.
கையில் என்ன?
வயலின்.
எங்கே வாசி?
இசை இரும்பு இதயத்தை கரும்பாக மாற்றி டானின் வசமாக்குகிறது.தினமும் டான் சோளக்காட்டை பார்வையிடலாம் பதிலுக்கு தனக்கு வயலின் கற்று தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறான்.டான் சோளக்காட்டை பார்வையிட்டு அங்கே ரகசியமாய் புதைக்கப்பட்டிருந்த ஆயுதப்புதையலில் இருந்து கொஞ்சம் புல்லட்களை எடுத்து வயலின் பாக்சுக்குள் வைத்து மறைத்து கடத்துகிறார்.
கடத்தல் வெற்றிகரமாக நடந்ததா?
டான் மாட்டிக்கொண்டாரா?
போராளிக்குழுக்கள் என்ன ஆனது?
கிளைமாக்ஸ் விவரிக்கிறது ....படத்தை பாருங்கள்.
பிளாக்&ஒயிட்டில் படமாக்கி கலைபடைப்பாக நமக்கு சமர்ப்பித்தவர் ஒளிப்பதிவாளர் Martin Boege. டான் ப்ளுட்டார்க்கோவாக வாழ்ந்திருப்பவர் Angel Tavira.இவரது முகத்தில் முதுமை வரைந்த சுருக்கங்கள்.... அல்ல அல்ல ...அது அந்த மலைவாழ் மக்களின் நெருக்கடிகள்.சமகால அரசியல் படங்களில் இது ஒரு மாஸ்டர்பீஸ்.எல் வயலினை தனது முதல் படைப்பாக தந்து உலகமெங்கும் 32 விருதுகளை வாரிக்குவித்திருக்கிறார் எழுதி இயக்கி தயாரித்த Francisco Vargas.
இப்படத்திற்க்கு போட்டியாக 2005 லேயே வ குவார்ட்டர் கட்டிங் தயாரித்து மோத விட்டிருக்கவேண்டும்.ஜஸ்ட் மிஸ்.....


Nov 8, 2010

Halfaouine-[1990]பையன் வயசுக்கு வந்துட்டான்

பதின்வயது..... புரியாத ரகசியங்களும்..... சொல்லமுடியாத விருப்பங்களும்.... அலைக்கழிக்கும் இனிமையான அவஸ்தைப்பருவம்.இதை மையக்கருவாக அமைத்துவிட்டால் திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்க்கு பஞ்சமிருக்காது.உதாரணமாக மெலினா...தமிழில் அழியாதகோலங்கள்....
துனிசியா நாட்டு சிறுவனின்......பிஞ்சிலே பழுக்கத்துடிக்கும் பதட்டத்தை அற்புதமாக படமாக்கியவர் இயக்குனர் Ferid Boughedir உலகசினிமாவுக்கே உரிய கலைத்தன்மை சற்று குறைவாக இருந்தாலும் இப்படத்தை அறிமுகம் செய்யக்காரணம் இப்படத்தின் காட்சிகள்..இஸ்லாமிக் நாடுகளின் படங்களில் நாம் காணவேமுடியாத நிர்வாணக்காட்சிகள்...அழகாக....கலைநயத்துடன் காட்சியளிக்கிறது. நோராவை அவனது தாய் குளிப்பாட்டும் காட்சியில் துவங்குகிறது படம்.பொதுக்குளியலறையில் ஏராளமான பெண்கள்....தாராளமாக ரசிக்கிறான் நோரா.
தன்னை விட வயதில் மூத்தவர்களோடு மட்டுமே சினேகம் கொள்கிறான் டீனேஜ் இயல்புப்படி... அவர்கள் அவனது கேள்விகளை கேலியாக்குகிறார்கள்.ஆனால் விடையாக வீட்டுக்கு அழகிய வேலைக்காரி [தமன்னா சாயல்] வருகிறாள்.
குளியலறையில் கண்களால் தரிசித்ததை கரங்களால் ஸ்பரிசிக்கும் வாய்ப்பு கிட்டியதும் வாலிபத்தின் கதவு திறக்கிறது நோராவுக்கு.சின்னசின்ன நகாசு வேலைகளில் துனிசியாவின் வாழ்வியலை தரிசிக்கும் பாக்கியத்தை வழங்குகிறார் இயக்குனர்.
நமது பதின்வயது சேட்டைகளை ஞாபகப்படுத்தும் ஆட்டோகிராப் தன்மை படம் முழுக்க நிரவிக்கிடக்கிறது.....என்ஜாய்.....

Nov 2, 2010

Shine-1996 இசைமேதை



மேதைகள் பிறப்பதில்லை...உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள்.இதற்க்கு சரியான உதாரணம் David Helfgott.

இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பியோனோ மேதையின் வாழ்க்கை பாடம்தான் படம்.

ஆஸ்திரேலியாவில் உருவான இப்படத்தை இயக்கியவர் Scot Hicks

கொட்டும் மழையில் டேவிட் அறிமுககாட்சியிலேயே அவரது காரெக்டரின் எக்ஸெண்ட்ரிக் தன்மையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.பின்பு பிளாஷ்பேக் உத்தியில் டேவிட்டின் கடந்தகால வாழ்க்கை அற்ப்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.சிறு வயதிலேயே டேவிட் படிப்பது... விளையாடுவது... தூங்குவது.... எல்லாமே பியோனோ.உள்ளூர் போட்டிகளில் வெற்றி வாகை சூடியதன் பயனாக நல்ல பியோனோ டீச்சர் பரிசாக கிடைக்கிறார்.14 வயதில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு வருகிறது.தந்தை சர்வாதிகாரத்துடன் அனுப்ப மறுக்கிறார்.பியோனோடீச்சர் இவனை அனுப்பி வைக்க சர்வ வழிகளிலும் போராடுகிறார்.தாயாரும் மறுக்கிறார்... “அவனை விட்டுவிடுங்கள்...இன்னும் அவன் படுக்கையை ஈரமாக்குகிறான்”

19வயதில் லண்டன் ராயல் காலேஜ் ஆப் மியூசிக் அழைக்கிறது.இப்போது தந்தையின் எதிர்ப்பை மீறி புறப்படுகிறது இந்த பியோனோ புயல்.இவனது இசை திறமை வளர்கிறது..... கூடவே எக்ஸெண்ட்ரிக் தன்மையும்.உதாரணமாக ஒரு காட்சி... எதிரில் வரும் பெண்ணுக்கு வணக்கம் சொல்கிறான்.அந்தப்பெண்ணோ பேயைக்கண்டது போல் மிரண்டு ஓடுகிறார்.காரணம் மேலே புஃல்சூட் அணிந்த ஜேம்ஸ்பாண்ட்...கீழே ஜட்டி அணியாத ஆதாம்.

Rachmaninoffஎன்ற மேதையின் 3வது இசைக்கோர்வையை வாசித்து பதக்கம் வெல்கிறான்.ஆனால் முற்றிலும் மனநிலை பிறண்டு போகிறான்.மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடையாமல் திரும்புகிறான்.முறிந்த மனதிற்க்கு மூலிகையாக சில்வியா வருகிறாள்.இவனது வெற்றிக்கு பின்னால் நிற்க்கிறாள்.
இப்படத்தின் இளையராஜா David Hirschfelder .இவரது இசைக்காக ஒருமுறை.....

டேவிட்டாக வாழ்ந்தவர்Geoffrey Rush.இவரது நடிப்புக்காக ஒரு முறை..... என பலமுறை பார்க்கலாம்....தப்பில்லை.