Jan 24, 2011

The Shop on Main Street -இனத்தை கருவருத்தல்

இப்படத்தை ஏற்க்கெனவே டிவிடியில் பார்த்திருந்தாலும் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் நேற்று அகன்ற திரையில் பார்த்தபோது புது அனுபவமாக இருந்தது.அரங்கம் வேறு ஹவுஸ்புல்.மிகமிக சந்தோஷமாக இருந்தது.ஆனால் படத்தின் முடிவு??????????
1965ல் இப்படத்தை இயக்கி சிறந்த வெளிநாட்டுப்படத்திற்க்கான ஆஸ்கார் பரிசை அள்ளியிருக்கிறார்கள் Jan Kadar&Elmar Klos

இப்படத்தின் கதை அமைப்பு தமிழக மீனவர்களை சிங்களப்பேய்கள் வதைப்பது போல் வலிக்கும்.வலிக்கவில்லையென்றால் உங்கள் பெயர் கலைஞர்.
இரண்டாம் உலகப்போரில்.... இன்று ஸ்லோவாக்கியாவாக இருக்கும்.... அன்றைய செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த இனப்பேரழிவை படம் போட்டு காட்டுகிறது கதை.
நகரமா..கிராமமா..என இனம் பிரிக்க முடியாத அழகிய இடம்.யூதர்களை ஒழித்து அனைத்தும் ஆர்ய மயமாக்கும் படலம்.திட்டம் போட்டு சட்டமாக்கிவிட்டார்கள் யூதர்கள் சொத்தை ஸ்வாகா பண்ண.ஆர்யர்கள் அல்லவா...ஆக்கிரமிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்களாயிற்றே!எல்லா இனத்திலும் நல்லவர்கள் உண்டே!அப்படி ஒருவன்தான் நம் நாயகன் டோனிபிரட்கோ.ஆர்யனாக இருந்தாலும் மிக மிக நல்லவன்.அவனுக்கு பரிசாக மெயின் ரோட்டில் ஒரு யூதருடைய கடையை வழங்குகிறான் அவனது சகலை[லோக்கல் போலிஸ் உயர் அதிகாரி...சுருக்கமாக நாஜி அடிமை]
உரிமை வழங்கப்பட்ட கடிதத்துடன் வருகிறான் டோனி.... கடைக்கு....கடையின் உரிமையாளர் முதிய விதவை ரோஸலியா.டெய்லரிங்கிற்க்கு தேவையான ஊசி,நூல்,பட்டன் விற்க்கும் கடை.டோனி கடிதத்தை காட்டி கரடியாக கத்துகிறான்.மூதாட்டிக்கு பார்வை வீக்...கேட்க்கும் திறன் அதைவிட வீக்....கடைக்கு வந்த கஸ்டமராக டீரீட் செய்கிறாள் பாட்டி.இந்த காமெடியிலிருந்து காப்பாற்ற வருகிறார் ஒரு ஆரியர்ஆனால் மனிதகுல மாணிக்கம்.பாட்டியின் குடும்ப நண்பர்.பாட்டியிடம் டோனியை கடை வேலைக்கு வந்த உதவியாளனாக அறிமுகம் செய்து வைக்கிறார்.பாட்டிக்கு பரம திருப்தி.பாட்டி இருவருக்கும் டீ கொண்டு வர உள்ளே போகிறாள்.கடையின் நிலமையை காட்டுகிறார் நண்பர்.சரக்கேயில்லை.காலிப்பெருங்காய டப்பா...சகலை ஏமாற்றி விட்டதாக கொதிக்கிறான் டோனி.சமரசம் செய்கிறார் நண்பர்.
பாட்டியிடம் வேலை செய்வது போல் நடி.....
வருமானத்துக்கு யூதர்கள் நல நிதியிலிருந்து வாராவாரம் கணிசமான தொகை தருவதாக வாக்களிக்கிறார்.மனிதாபத்துடன் ஏற்றுக்கொள்கிறான் டோனி.இதற்க்கப்புறம் வருகின்ற காட்சிகளெல்லாம் அன்பேவா காமடிதான்.
யூதர்களை விட யூதர்களுக்கு உதவும் ஆரியர்களுக்கு தண்டனை அதிகம்.நண்பரை கடித்து குதறுகின்றன சிங்கள வெறிநாய்கள்.... ஸாரி....நாஜி நாய்கள்.டோனி இக்காட்சியை பார்த்து பதறுகிறான்.....பயப்படுகிறான்....
யூதப்பாட்டியை காப்பாற்றினானா?
காட்டிக்கொடுத்தானா?
இதுதான் கிளைமாக்ஸ்.
ஆனால் ஒன்று இந்த டோனி கலைஞர் மாதிரி புத்திசாலியில்லை.அண்ணாசமாதியில் உண்ணாவிரதம் இருக்கத்தெரியவில்லை.

Jan 20, 2011

ஆடுகளம்-தமிழ்சினிமாவின் அதிசயம்


உலகசினிமாதரத்திற்க்கு தமிழ்சினிமாவை உயர்த்தும் முயற்ச்சியில் தனது பங்காக ஆடுகளத்தை வழங்கிய வெற்றிமாறனுக்கு மிலிட்டரி சல்யூட்.பொல்லாதவனிலேயே தன்னை இனம் காட்டிய வெற்றிமாறன் ஆடுகளத்தில் இன்னும் ஸ்ட்ராங்காக நிறம் காட்டி உள்ளார்.குப்பைகளை கூவிக்கூவி விற்ற சன் நிறுவனம் முதல்முறையாக நல்லபடத்தை நாடெங்கிலும் சேர்த்து விமோசனம் தேடிக்கொண்டது.


சேவல் சண்டையை களமாக வைத்து அட்டகாசம் பண்ணி இருக்கிறார்.நிச்சயமாக இயக்குனருக்கு அமரோஸ் பெரோஸ்தான் இன்ஸ்பிரேசனாக இருந்திருக்க முடியும்.முதல்மரியாதை,பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம் படத்திற்க்கு இணையான மதுரை மண்வாசனையை சுவாசித்தேன் ஆடுகளத்தில்.

சேவல் சண்டையை கிராபிக்சில் காட்டிய இயலாமை எனக்கு புரிகிறது.நண்பர்களே...இங்கேதான் நல்ல படைப்பை தர ஆயிரம் தடைகள்....அதில் தலையாயது சென்சார்.ஸ்ரேயாவின் 50 சதவீத மார்பை காட்டிக்கூட சென்சாரிடம் யு சர்ட்டிபிகேட் வாங்கிவிடமுடியும்.கோழியை துரத்தி பிடிக்கும் காட்சி கூட இன்று படமாக்க முடியாது.மிருக வதை என்று சென்சார் அனுமதி மறுத்திருக்கும்.நல்லவேளை எலிப்பத்தாயம் அன்றே வந்து விட்டது.இன்று எடுத்திருந்தால் அடூர் கோபால கிருஷ்ணன் சென்சாரிடம் சிக்கி சீரழிந்திருப்பார்.

ஆடுகளத்தில் பாடல் காட்சி கூட ஹைக்கூ கவிதையாய் கவர்கிறது.சண்டைக்காட்சிகளில் இன்னும் நிஜத்தன்மை வெளிப்படுத்தியிருக்கலாம்.


கவிஞர் வா.மு.ச.ஜெயபாலன் முதல் படத்திலேயே என்னமா நடிச்சிருக்கிறார்.கனத்த மீசை...கயமையை ஒளித்து ஓளிரும் கண்கள்...அட்டகாசம் ஐயா..ஆனால் ராதாரவி டப்பிங் குரல் சிறு நெருடல்தான். கிஷோருக்கு சமுத்திரக்கனியின் மதுரைக்குரல் படு கச்சிதம்.
தனுஷ் மதுரைக்களத்தில் சர்க்கஸ் ஆட்டம்.குரலில்...பாடி லாங்குவேஜில் மதுரை மல்லி மணக்கிறது.இப்படியே தொடருங்கள்....நல்ல இயக்குனர் கையில்தான் பிள்ளையாராக பிடிக்கப்படுவீர்கள். விளம்பரப்படத்தில் நொடிகளில் திறமை காட்டிய தாப்ஸி ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.தனுசின் தாய்,நண்பன்,வில்லன் என அனைவருமே அசத்தல் மன்னர்கள்.
ஒளிப்பதிவாளர்,எடிட்டர்,கலை இயக்குனர் என அனைவர் கரங்களுக்கும் கத்ரீனாகைப்பை வைத்து முத்தம் கொடுக்க வைக்கலாம்.
பாடல்களில் சிக்ஸர் அடித்த ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் சில இடங்களில் சொதப்பி பல இடங்களில் சர்வ தேசத்தரம் காட்டியிருக்கிறார்.
கிளைமாக்ஸ் இப்படத்தில் மிக மிக கச்சிதம்.ரெகுலரான தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல பயணித்து சரேலென யூட்டெர்ணெடுத்து புதிய பாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர்.

ஆடுகளம் தமிழ் சினிமாவின் புதிய தளம்.

Jan 3, 2011

தமிழ்சினிமாவை காயப்படுத்தாதீர்


நான் பிளாக் எழுத ஆரம்பித்ததே மிகமிகச்சமீபம்.ஆனால் பால்குடிப்பருவத்தில் இருந்தே தமிழ்சினிமாவை ருசிக்க ஆரம்பித்து விட்டேன்.சென்னை சாந்தி தியேட்டரில் திருவிளையாடல் ரீலிஸ்.என் தாயார் மடியில் இருந்து பார்த்த முதல் படம்.அதனால்தான் என்னவோ தாய்ப்பாலையும் தமிழ்சினிமாவையும் ஒன்றாகத்தான் மதிக்கிறேன்.உலகசினிமா உயரத்துக்கு தமிழ்சினிமா வளர வேண்டும் என்பதே என் ஆசை.... மோகம்....வெறி....கேன்ஸ்&ஆஸ்கார் அரங்கில் என் காலத்திலேயே தமிழ்சினிமா மகுடம் சூட்டப்படும்.எத்தனையோ நிஜமாகிப்போன என் கனவுகளில் இதுவும் இடம் பெறும்.
சரி...விசயத்துக்கு வருகிறேன்.பிரபலங்களின் தமிழ்சினிமா ரீலிசாகும்போது வலைப்பூக்களில் விமர்சனம் என்ற பெயரில் விஷம்தான் வீசப்படுகிறது.தன்னை மேதாவியாக காட்டும் மோடி வித்தை நடத்தப்படுகிறது.தமிழ்சினிமாவுக்கு திறமையான...நேர்மையான...விமர்சகன் இன்று வரை பிறக்கவேயில்லை.விமர்சகன் சினிமாவின் அனைத்து உட்கூறுகளையும் அறிந்த வித்தகனாய் இருத்தல் அவசியம்.ஒன்று கூடத்தெரியாமல் எல்லாம் தெரிந்த ஏகாம்பரர்கள்தான் இந்த விமர்சகர்கள்.ஒவ்வொரு விமர்சனமும் தமிழ்சினிமாவை உயரத்தூக்கும் தரம் இருக்கவேண்டும்.எந்திரன்,நந்தலாலா,ம.அம்புவுக்கு வந்த அனைத்து விமர்சனக்கணைகளும் விஷம் ஊறியவைதான்.ஒரு தரமான ஹாலிவுட் படத்துக்கு விமர்சனம் எழுதுங்கள்.அப்புறம் உலகின் டாப் 10 விமர்சகர்களின் விமர்சனத்தை படியுங்கள்.அப்போது தெரியும் உங்களுக்கு.... விமர்சனக்கலையில் எல்.கே.ஜி என்று....விமர்சனக்கலையை கற்றுக்கொண்டு வாருங்கள்.வாழ்த்துகிறேன்.