Dec 31, 2012

‘பிரமிடு சாய்மீரா’ டுபாக்கூர் நிறுவனமா ?


நண்பர்களே...
பிரமிடு சாய்மீரா என்ற நிறுவனம் ‘மர்மயோகி’ தயாரிப்பு தொடர்பாக
கமல் மீது மோசடி வழக்கு தொடர்ந்ததாக பத்திரிக்கைச்செய்திகள் வந்தன.
நான் இது குறித்து எனது திரையுலக நண்பர்களிடம் விசாரித்தேன்.
கிடைத்த தகவல் திகைப்பிலாழ்த்தியது.

அவர்கள் கூறிய தகவல்களின் சாராம்சம்...

 ‘பிரமிடு சாய்மீரா’ நிறுவனம் ஏகப்பட்ட  'கார்ப்பரேட் தில்லுமுல்லுகளை' செய்துள்ளதாம்.
கடந்த காலத்தில் தமிழ்நாடெங்கும் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து
நடத்தியது சாய்மீரா.
அதற்கான ஒப்பந்தப்படி தியேட்டர்களுக்கு குத்தகை பணம் தராமல் நிறைய  பேரை ஏமாற்றி உள்ளதாம்.

இந்த மோசடி நிறுவனம் ஒரே நேரத்தில் பத்து படம் பூஜை போட்டது.
கமலை வைத்து ‘மர்மயோகி’ தயாரிப்பதாக... பூஜை மட்டும் போட்டது.
இதற்கெல்லாம் காரணம் என்ன ?

இதற்கு சற்று பின்னோக்கி போக வேண்டும்.

சாய்மீரா மோசடி நிறுவனம் தீடிரென்று பெரிய ஸ்டார் படங்களை மொத்தமாக விலைக்கு வாங்கி தியேட்டர்களில் திரையிட்டது.
இதன் ஆரம்ப கால ஜொலிஜொலிப்பில் சாய்மீரா  ஷேர்கள் ஷேர் மார்கெட்டில் உயரே சென்றது.
சாய்மீரா வெளியிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கவே
சாய்மீரா ஷேர்கள் அதல பாளத்துக்கு சரிந்தன.
சாய்மீரா நிறுவனத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்கள்,
சாய்மீரா ஷேர்களை  ‘அடிமாட்டு விலைக்கு’ வாங்கி பதுக்கினர்.

கமலை தங்களது வலையில் வீழ்த்தி ஒப்பந்தம் போட்டு  ‘மர்மயோகி’ பூஜையை பிரம்மாண்டமாக நடத்தினர்.
பத்து இயக்குனர்களை வைத்து ஒரே நேரத்தில் பத்துப்படத்திற்கும் பூஜை போடப்பட்டது.
சாய்மீரா ஷேர்கள் இப்போது அதிக விலைக்கு உயரத்தொடங்கியது.
 ‘பதுக்கி வைத்தவர்கள்’ நல்ல விலை வந்ததும் எல்லா ஷேரையும் விற்று
கொள்ளை லாபம் பார்த்து விட்டனர்.
அதோடு மர்மயோகி & பத்துப்படத்தயாரிப்பு அனைத்தையும் ஊற்றி மங்களம் பாடி விட்டனர்.

சாய்மீரா என்ற  ‘டுபாக்கூர்’ நிறுவனத்தின் பங்கு வர்த்தக சூழ்ச்சி அறியாமல் சிக்கியவர்கள் கமலும், ஏனைய பத்து இயக்குனர்களும்தான்.

சூழ்ச்சிகள் நிலைப்பதில்லை.
உண்மை உழைப்பு தோற்பதில்லை.
திரையுலகம், பதிவுலகம் எல்லா உலகிற்கும் இது பொருந்தும்.



2013ல் அனைவருக்கும் வெற்றியின்
‘விஸ்வரூப தரிசனம்’கிடைக்க வாழ்த்துகிறேன்.

               புத்தாண்டு வாழ்த்துக்கள்.



Dec 29, 2012

2012ல் சிறந்த படம் வழக்கு எண் 18 \ 9... ஏன் ? ஏதற்கு ?? எப்படி ???


நண்பர்களே...
‘மூளைக்கு’ வேலை கொடுக்கும் பதிவுகளையெல்லாம் மூட்டை கட்டி 2013க்கு தள்ளி விட்டேன்.
கடுமையான வேலைப்பளு இருப்பதால்...
மிக மிக  ‘லைட்டாக’ எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
பொறுத்தருள்க.

இந்த ஆண்டின் சிறந்த படமாக ‘வழக்கு எண் 18 \ 9 தேர்வு செய்ததற்கு காரணம்,
இந்தப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களுக்குள் மிகச்சிறந்தது.
இந்தப்படம் இன்னும் கொஞ்சம் மேம்பட்டு இருந்திருந்தால் இந்தியாவிலேயே சிறந்த படம் என்று கொண்டாடி இருப்பேன்.
பாலாஜி சக்திவேலுடன்...பிற தொழில் நுட்பக்கலைஞர்களும்
அவருக்கு இணையாக திறம்பட பணியாற்றியிருந்தால்...
இப்படம்  ‘ஹேராம்’ தரத்தை தொட்டிருக்கும்.

இந்தப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பாமல் ‘பர்பி’ என்ற பம்மாத்து திரைப்படத்தை அனுப்பிய முட்டாள்கள் என் கையில் கிடைத்தால்
அறம் பாடியே அழித்திருப்பேன்.
‘வழக்கு எண்’ திரைப்படம் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருந்தால்,
விருது கிடைக்கிறதோ இல்லையோ...
முதன் முதலாக விருதுக்கு போட்டியிடும் பட்டியலில் இப்படம் இடம் பெற்றிருக்கும்.
‘நாமினியாக’ நிச்சயிக்கப்பட்டிருக்கும்.
தமிழன் இரண்டாம் முறையாக ஆஸ்கார் அரங்கில் இடம் பெற்றிருப்பான்.

‘பர்பி’ படத்தை பார்த்து...வெள்ளைக்காரன் சிரித்திருப்பான்.
“இன்னும்  ‘சார்லி சாப்ளின்’ படத்தை காப்பியடிச்சுகிட்டு இருக்கீங்களா!
நீங்க இன்னும் வளரவேயில்லையா! ”... என நக்கலடித்திருப்பான்.

ஒரு படம் வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கு பெற்று விருது பெற தயாரிப்பாளர்தான் முயற்சி எடுக்க வேண்டும்.
வழக்கு எண் தயாரிப்பு நிறுவனம்  எப்படிப்பட்டது? எனத்தெரியவில்லை.

ஹேராம் தொடர் முடிந்ததும் வழக்கு எண்ணை ஆய்வு செய்து ஒரு தொடர் எழுத எண்ணி உள்ளேன்.
இந்தப்பதிவில் வழக்கு எண்ணின் சிறப்பம்சங்களில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.


முதலில் படத்தின் கதாநாயகனை பார்ப்போம்.
இப்படத்தின் கதாநாயகன் போலிஸ் இன்ஸ்பெக்டர்தான்.
அவன்தான் இக்கதையை இயக்குகிறான்.
அவன்தான் கதையின் மர்ம முடிச்சுகளை போடுகிறான்.
அவன் மூலமாகத்தான் பணமும்,ஜாதியும்,அதிகாரமும் இயங்குகிறது.
உண்மையை குலைக்கிறது.

படம் முழுக்க நிறைய காட்சிகளில் வருபவன்தான் கதாநாயகன் என்பது அல்ல.
பாலாஜி சக்திவேலின் கதாநாயகர்கள் வெளிப்படையாக தெரிய மாட்டார்கள்.
நாம்தான் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.
‘காதல்’ படத்திலேயே கதாநாயகனை கடைசிக்காட்சியில்தான்
அறிமுகப்படுத்துவார்.

படத்தில் வரும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மிக நுட்பமாக ஆய்வு செய்து படத்தில் இடம் பெறச்செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
படத்தின் கதாநாயகி ஜோதியின் மீது ஆசிட் வீசப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக ஷாட் போட்டிருப்பார்.
சென்னை அரசு மருத்துவமனைகளில் கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைதான் தீக்காயம், ஆசிட் வீச்சு சிகிச்சைக்கு புகழ் பெற்றது.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு வாழை இலையில் கிடத்தப்பட்ட  உருவத்தை
ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதை வேறோரு ஷாட்டில்  ‘கமிட்’ பண்ணியிருப்பார் பாலாஜி சக்திவேல்..

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மாமேதை கார்ல் மார்க்ஸின் முதலாளித்துவம் பற்றிய கருத்தாக்கத்தை கதையாக்கி காவியம் படைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

“ முதலாளித்துவத்தில் மனித உறவுகள்...பண உறவுகளாகி விட்டன.
புனிதங்கள்...புனிதங்களை இழக்கின்றன”.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்த  ‘மிருகம்’ மனிதத்தன்மையில்லாமல் வரம்பு மீறி பேசுகிறான்.

“ உன்னையை ஊர் மேய விட்டா, பத்து காசு தேறாது”.

பணம் ஏழைகளின் கிட்னியை விலைக்கு வாங்குகிறது.
பள்ளிக்கு போகும் சிறுவர்களை குறி வைத்து பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கொத்தடிமையாக்குகிறான் ஒரு புரோக்கர்.
முறுக்கு கம்பெனிக்காரன் பணம் கொடுத்து வாங்கிய கொத்தடிமையை இழந்து விடுவோம் என்ற காரணத்தால்...
பெற்றோர்கள் இறந்த செய்தியையே மறைக்கிறான்.

பணம் படைத்த காரணத்தால்  ‘பரத்தை’ பள்ளிக்கூடம் நடத்துகிறாள்.
அவள் நடத்தை அறிந்த மகன் ஐம்பதாயிரம் ரூபாயை மிரட்டி கேட்கிறான்.
பள்ளி செல்லும் வயதில் புழங்கும் மித மிஞ்சிய பணம்,
சிறுவனை காம விளையாட்டில் ஈடுபட வைக்கிறது.
இறுதியில், ஆசிட் அடிக்கும் பயங்கரவாதியாக்குகிறது.



கூத்து கட்டும் சிறுவன் பெண் வேடமிட்டு ஆடும் போது அவன் மார்பில் பணம் குத்தப்பட்டிருக்கும்.
அவனை கலைக்கண்ணோடு பார்க்காமல்,
காமக்கண் கொண்டு பார்த்த ‘சாரு கேசிகள்’ குத்திய பணம் அது.

பணம்தான், இன்ஸ்பெக்டரை உண்மையை திரித்து பொய் வழக்கு போட வைக்கிறது.

வேலு பசியால் மயக்கமுற்றிருக்கும் போது  ‘பாலியல் தொழிலாளி ரோஸி’
 ‘மனித நேயத்தால்’ பணம் கொடுத்து இட்லி வாங்கி கொடுக்கிறாள்.
இங்கே பணம், ரோஸியிடமிருக்கும் மனிதநேயத்தை வெளிக்கொண்டு வருகிறது.

அதே  ‘பாலியல் தொழிலாளி ரோஸி’ நோய்வாய்ப்பட்டு நலிந்திருக்கும்போது, வேலு  ‘சகோதரனாய்’ பணம் கொடுக்கிறான்.
இங்கே பணமே, புனிதமாகிறது.

பணம் மனிதனை மிருகமாக்கும் அல்லது மனிதநேய மிக்கவனாக்கும்.
இந்த  பணத்தை எப்படி கையாளப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பார்வையாளரிடம் வீசி உள்ளார் பாலாஜி சக்திவேல்.


திரையுலக மேதை ராபர்ட் பிரஸ்ஸான்,
தனது படைப்பான  'L' ARGENT' [ 1983] படத்தில்,
பணம் காஸ் & எபெக்டில் இயங்குவதை படமாக்கியிருக்கிறார்.
L' Argent \ 1983 \ France \ Directed by Robert Bresson.

பாலாஜி சக்திவேல்,
தனது படத்தில்...  ‘பணம்’ படம் முழுக்க ‘தீமெட்டிக்காக’ இயங்குவதை... படமாக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில்,
‘இக்கதையில் வரும் சம்பவங்கள், குறியீடுகள் யாவும் கற்பனையே...
யாரையும் குறிப்பிடுவன அல்ல’...என்ற டைட்டில் கார்டில் ஒரு ’பொய்யை’ சொல்லி விட்டு...
படம் முழுக்க உண்மைகளை புதைத்து வைத்து விட்டார் பாலாஜி சக்திவேல்.

அவரது குறியீடுகளுக்கு  ஒரே ஒரு சாம்பிள்...

கதாநாயகனான இன்ஸ்பெக்டர்,
 ‘ரோட்டுக்கடையில்’ வேலை பார்க்கும் இளைஞனை விசாரிக்கும் காட்சி...

இளைஞன் : “ எங்க ஊர்ல விவசாய நிலத்தையெல்லாம் அழிச்சு...
பிளாட் போட்டு வித்திட்டதாலே...
ரொம்ப பேத்துக்கு வேலையில்லாம போச்சு”

அவன் பேசும் போது திரையை ‘பிளாக் அவுட்’ பண்ணி காலத்தையும் இடத்தையும் கடக்கிறார் இயக்குனர்.
‘பிளாட் போட்டு வித்திட்டதால’ என்ற டயலாக்கின் போது,
‘வசந்தம் கோல்டு சிட்டி’ என்ற ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நிறுவிய போர்டும்....
‘பிளாட்’ போட்டு பிரிக்கப்பட்ட நிலமும்  ‘ஷாட்டில்’ இருக்கும்.

‘ரொம்ப பேத்துக்கு வேலையில்லாமல் போச்சு’ என்ற டயலாக்கின் போது
‘வைட் ஷாட்டில்’ ஃபோர் கிரவுண்டில் கத்தாழை இருக்கும்.
பேக்கிரவுண்டில் ஊரைக்காலி பண்ணி சில  குடும்பங்கள் போய்க்கொண்டிருக்கும்.
புல் பூண்டு இல்லாத வறண்ட பெரிய நில பரப்பை ஒரே ஷாட்டில் கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர்.
கிராமத்தில் வளமை இல்லை...வறுமை இருக்கிறது என்பதற்கு குறியீடாக
செழித்து வளர்ந்திருக்கும் ‘கத்தாழையை’  ஃபோர்கிரவுண்டில் வைத்து
ஷாட் கம்போஸ் செய்த பாலாஜி சக்திவேலை,
உலகசினிமா இயக்குனர் என்றால்...
‘நாஞ்சில் நாட்டு நாட்டாமைக்கு’ நட்டுக்குது.
அந்த அரை வேக்காட்டு  ‘பிரதாபங்கள்’ இனி எடுபடாது.
படத்தில் வரும் கனவுக்காட்சியில் [ மேலே உள்ள படம்]
கடந்த காலம்,நிகழ் காலம்,வருங்காலம்
என முக்காலத்திலும் ‘பாஸிட்டிவ்’ நிகழ்வுகளே நடக்கும்.
இக்காட்சி  ‘டைட்டானிக்’ [ 1997 ] கிளைமாக்ஸ் காட்சிக்கு இணையாக இருக்கும்.
டைட்டானிக் இறுதிக்காட்சியில்  ‘ரோஸ்’ உயிர் பிரியும் தருவாயில்,
அவளது நனவுலகில்,  ‘ஜேக்குடன்’ இணைவதை காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
அப்போது அந்த ஜோடியை சுற்றி  ‘கடந்த காலத்தில்’ உள்ள பாசிட்டிவ் காரெக்டர்கள் மட்டுமே இருக்கும்.
நெகட்டிவ் காரெக்டர் ஒன்று கூட இருக்காது.

கலைக்கண்ணோடு... காழ்ப்புணர்சியின்றி... வழக்கு எண்ணைப்பாருங்கள்.
இந்த ஆண்டின் சிறந்த படமாக வழக்கு எண்ணை தேர்ந்தெடுக்க
எந்த தயக்கமும் இருக்காது.

‘வழக்கு எண் தொடரை’ 2013 ல் தொடர உங்கள் வாழ்த்து அவசியம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 28, 2012

2012 சிறந்த இயக்குனர் யார் ?


நண்பர்களே...
2012 ல் அறிமுக இயக்குனர்களில் முத்துகள் மூன்றாக ஜொலித்தது...
1  ‘காதலில் சொதப்புவது எப்படி?’ பாலாஜி மோகன்.
2  ‘பிஸ்ஸா’ கார்த்திக் சுப்புராஜ்.
3 ‘நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பாலாஜி தரணீதரன்.
இவர்கள் மூவரையுமே சம அந்தஸ்தில் கொள்ள வேண்டும்.
2012 ல் மிகச்சிறந்த அறிமுக இயக்குனர்களாக மூவரையுமே பாராட்டி வாழ்த்துகிறேன்.
அடுத்தப்படத்தை சிறப்பாக உருவாக்கி... ‘மிகச்சிறந்த அறிமுக இயக்குனர்கள்’ என்ற பதவியிலிருந்து பிரமோஷன் ஆகி  ‘மிகச்சிறந்த இயக்குனர்கள்’ என்ற பதவியை அடைவது அவர்கள் கடமை.


போன பதிவில் குறிப்பிட்டபடி 2012ல் உலகசினிமா தரத்தை நோக்கி பயணித்தது வழக்கு எண் 18 \ 9 & நீர்ப்பறவை மட்டுமே.
நீர்ப்பறவை இயக்குனர் சீனு ராமசாமியை,
2012ன் மிகத்துணிச்சலான இயக்குனர் எனச்சிறப்பாக பாராட்ட வேண்டும்.
ஏனெனில் அவரது படத்தில் இரண்டு கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
1. மதுவின் தீமை
2. சிங்கள் ராணுவத்தால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்.
இக்கருத்தை,
ஆழமாக சொல்லவில்லை...
அகலமாக சொல்லவில்லை...
குட்டையாக சொல்லவில்லை என நொள்ளை நொட்டை சொல்பவர்கள்
தயாரிப்பாளர் யார் என கவனத்தில் கொள்ளவேயில்லை.
‘கலைஞரின் பேரன்’ தயாரித்தப்படத்தில் இக்கருத்தை சொல்லியதற்கே
சீனு ராமசாமியை பாராட்ட வேண்டும்.
ஹிட்லரின் தயாரிப்பில்  ‘யூதப்படுகொலையின் பயங்கரத்தை’ சித்தரிப்பதற்கு
ஆண்மை,ஆளுமை இரண்டுமே வேண்டும்.
சீனு ராமசாமியிடம் இரண்டுமே இருப்பதை நீர்ப்பறவையில் பார்க்கலாம்.
எனவே சீனு ராமசாமியை 2012ன் மிகத்துணிச்சலான இயக்குனர் எனப்பாராட்டி வாழ்த்துகிறேன்.



சீனு ராமசாமியை  தனிப்பிரிவாக்கி பாராட்டி விட்டதால்,
2012ன் மிகச்சிறந்த இயக்குனராக,  ‘பாலாஜி சக்திவேல்’ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/ 9 என தனது எல்லாப்படங்களிலுமே சமூக அக்கறையை வெளிப்படுத்தி உள்ளார்
பாலாஜி சக்திவேல்.
 ‘வழக்கு எண்ணில்’ சற்று உக்கிரமாக தனது அக்கறையை பதிவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

கருத்து சொன்னாலே, வசூலில் காயடித்து விடுவார்கள் தமிழ் ரசிகர்கள்.
ஓ.கே...ஓ.கே..., மசாலா ஃகபேக்கு கொட்டியதைப்போல கலெக்‌ஷனை
கொட்ட வேண்டாம்.
பிஸ்ஸாவுக்கு தந்த வசூலையாவது தந்து கவுரவித்திருக்கலாம்
தமிழ் ரசிகர்கள்.

ஆனால் பாலாஜி சக்திவேல் தெளிவாக உள்ளார்.
மக்களுக்கான சினிமாவை தொடர்ந்து கொடுப்பதில் உறுதியாக உள்ளார்.
காட்பரிஸ் சாகலேட்டுக்குள்  ‘சுக்கு,திப்பிலி,மிளகு’ சேர்த்து கொடுக்கும் கொள்கைக்காகவே அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.
ஷங்கர் பட ரசிகர்களுக்கு,  ‘பதேர் பஞ்சலி’ கருத்தைச்சொல்லும்
செப்படி வித்தைக்காரர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

2012ன் சிறந்த இயக்குனராக பாலாஜி சக்திவேலை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.


சிறந்த இயக்குனரின் படம்... சிறந்த படமாகத்தானே இருக்க முடியும்.
எனவே, 2012ன் சிறந்த படம்  வழக்கு எண் 18 \ 9.
அதற்குரிய காரண காரியங்களை அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

Dec 27, 2012

2012 சிறந்த ஒளிப்பதிவாளர் யார்?


நண்பர்களே...
கடையை  ‘தனித்தனியே’ கூறு போட்டு கூவிக்கூவி விற்று விட்டேன்.
இறை அருளால் எனது எதிர்பார்ப்பை விட அதிக விலைக்குப்போனது.
அடுத்து இந்த ‘முன்னாள் திருட்டு டிவிடியின்’ பயணம் கோலிவுட்டை நோக்கித்தான்.
அங்கேதான் எனக்கான சிம்மாசனம் காத்திருக்கிறது.
இனி பதிவிற்கு செல்வோம்.

ஒரு திரைப்படத்தை முதலில் கண்ணால் பார்ப்பது ஒளிப்பதிவாளரே.
அவர் பதிவு செய்த பிம்பங்களின் வழியாகத்தான் நாம் ஒரு படைப்பை அணுக முடியும்.

ஒளிப்பதிவு பற்றி  'விக்கிப்பீடியாவில்' உள்ள ரத்தின சுருக்கம்...

In 1919, in Hollywood, the new motion picture capital of the world, 
one of the first (and still existing) trade societies was formed:
the American Society of Cinematographers (ASC), 
which stood to recognize the cinematographer's contribution to the art and science of motion picture making. 
Similar trade associations have been established in other countries, too.
The ASC defines cinematography as:
a creative and interpretive process that culminates in the authorship of an original work of art rather than the simple recording of a physical event. 
Cinematography is not a subcategory of photography. 
Rather, photography is but one craft that the cinematographer uses in addition to other physical, organizational, managerial, interpretive and image-manipulating techniques to effect one coherent process.[6]


ஏ.ஏஸ்.ஸியால்  தேர்வு செய்யப்பட்டு அதன் பெருமை மிகு உறுப்பினராகி இந்திய ஒளிப்பதிவுக்கு பெருமை சேர்த்தவர்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

இயக்குனருக்கு அடுத்தபடியாக சினிமாவில் மிக முக்கியமான பொறுப்பு ஒளிப்பதிவாளருக்கே.
ஏனென்றால் எடிட்டிங்,இசை, ஏன் நடிகர் கூட இல்லாமல் ஒரு படத்தை உருவாக்க முடியும்.
கடல் அலையும், ஒரு சிறு தக்கையும் நடித்த படம்...
நடிகர்கள் இல்லாத உலகசினிமாவுக்கு சாட்சியாக இருக்கிறது.

எடிட்டிங்கே தேவைப்படாத ...
ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட  ‘ரஷ்யன் ஆர்க்’ என்ற திரைக்காவியம் இருக்கிறது.
Russian Ark \ 2002 \ russia \ Directed by Alexander Sokurov.


*********************************************************************************
‘ரஷ்யன் ஆர்க்’ பற்றி நண்பர் ராஜ் சமீபத்தில் பதிவெழுதி இருக்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ' Tilman Buttner '
உலகின் தலை சிறந்த ரஷ்ய மியூசியமான ‘ஹெர்மிடேஜ் மியூசியத்தில்’ படமாக்கப்பட்டது.
2000 நடிகர்கள்.
‘ஸ்டடி கேம்’ காமிரா மூலம்  ‘ஒரே நாளில் ஒரே ஷாட்டில்’ படமாக்கினார்
' Tillman Buttner '.

300 வருட ரஷ்ய சரித்திரத்தை, ‘கேப்ஸ்யூலாக்கி’ தந்திருக்கிறார்
இயக்குனர் அலக்ஸாண்டர் சுக்ரோவ்.

 ‘ஹெர்மிடேஜ் மியூசியத்தில்’ ஒரே ஒரு நாள் மட்டும்தான்  சூட்டிங்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
எனவே ஆறு மாதம் ஒத்திகை பார்க்கப்பட்டது.
திட்டமிடலுக்கு இப்படம் மிகப்பெரிய உதாரணம்.

*********************************************************************************

 ‘சிறந்த’ எனத்தேர்வு செய்வதில் வணிகப்படங்களை கணக்கில் எடுக்கக்கூடாது.
2012ல் உலகசினிமா என்ற திசையை நோக்கிப்பயணித்ததில்,
சிறப்பாக இருந்தது  இரண்டு படங்கள்தான்.
1 வழக்கு எண் 18 \ 9
2 நீர்ப்பறவை

இந்த இரண்டு படங்களிலுமே, ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும்...
நீர்ப்பறவை ஒரு படி மேலே பறந்தது.



பனிப்பிரதேசத்தையும், கடல் பிரதேசத்தையும் படம் பிடிப்பது மிகச்சிரமமான ஒன்று.
 ‘லைட் ரிப்ளக்-ஷன்’ இந்தப்பகுதிகளில் அதிகமாக இருக்கும்.
எனவே  ‘ஓவர் எக்ஸ்போஷரை’ கண்ட்ரோல் செய்து படம் படிப்பது ஒளிப்பதிவாளருக்கு கடினமான சவாலாகும்.
நீர்ப்பறவையில் சவாலை சமாளித்து சாதனை செய்திருந்தார் ஒளிப்பதிவாளர்.



‘நீர்ப்பறவை’ சூட்டிங் செய்யப்பட்ட . ‘மணப்பாடு’ என்ற கிராமம்
எனது கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது.
எனவே அந்தப்பிரதேசம் எனக்கு அத்துப்படி.
அப்பிரதேசத்தை கதைக்களனுக்கு பொருத்தமாக்கி ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்க வைத்தார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்.


இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியெத்தை 
தேர்வு செய்வதில் மகிழ்கிறேன்.

நண்பர் ராஜ் எழுதிய ‘ரஷ்யன் ஆர்க்’ பற்றிய பதிவிற்கு இங்கே செல்லவும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 25, 2012

கிரிக்கட்டிலிருந்து சச்சின் விலகல் ஏன் ?

நண்பர்களே...

கிரிக்கட்டிலிருந்து சச்சின் விலகல் குறித்து ஊடகங்களும்...ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உண்மையான காரணத்தை அறிந்து திடுக்கிட்டுப்போனேன்.


அனைவருக்கும் கிருத்துமஸ் தின வாழ்த்துக்களைக்கூறி
சிரித்தபடி விடைபெறுகிறேன்.


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 24, 2012

மணிரத்னம், பாரதிராஜா பற்றி இளையராஜா

நண்பர்களே...
நேற்று இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
மொத்த கோவையும் திரண்டு ராஜாவை கேட்க வந்து விட்டது.
வழக்கமான கச்சேரி போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு நிகழ்ச்சியை
நடத்தினார்.
இசை பற்றி ’குறுகிய கால’வகுப்பு எடுத்தார்.


முழுசாகப்பாடப்பட்டது முதல் நான்கு பாடல்கள்தான்.
‘ஜனனீ... ஜனனீ ’ எனத்தொடங்கி ரசிகனை மெய்மறங்க வைத்து  ‘அரஹர...அரஹர மஹாதேவ் ’...பாடலில் உக்கிரம் கொள்ள வைத்தார்.

இதற்குப்பிறகு ராஜா தனது  ‘மலரும் நினைவுகளை’ நினைவு கூர்ந்தார்.
அந்த நினைவு கூறலுக்கு சம்பந்தப்பட்ட பாடலில் சில வரிகள் மட்டும் அவராலும், குழுவினராலும் பாடப்பட்டது.
பிராக்டிஸ் இல்லாமல் பாடப்பட்டதால்,,
குழுவினர் செய்த தவறுகளை...சுட்டி காட்டி மீண்டும் திருத்தி பாட வைத்தார்.


கார்த்திக் ராஜா கேள்விகள் கேட்டு அதற்கு பதில் சொல்வது போல்
மொத்த நிகழ்ச்சியையும் கொண்டு சென்றார் ராஜா.

கார்த்திக் ராஜா : பாரதி ராஜா பற்றி சொல்லுங்களேன்.

ராஜா : இரண்டு பேருமே ஒரே ஊர்.
அதனால் உரிமையுடன் பேசி பாடல் உருவாகும்.
என்னடா ட்யூன் இது...வேற போடு எனகேட்டு வாங்கிப்போவார்.
நான் வேற படத்துக்கு, அவர் ரிஜக்ட் செய்த ட்யூனை உபயோகித்து...
பாட்டு  சூப்பர் ஹிட் ஆனதும் ‘அடடா போச்சே’ என புலம்புவார். 

அவர் என்னிடம்,
சில நேரம் சிச்சுவேஷன் சொல்லும் போது ‘என்னடா இது சிச்சுவேஷன்’ எனச்சொல்லி இருக்கிறேன். 
நானாக ஒரு ட்யூன் போட்டு  ‘இந்த பாடலுக்கு சிச்சுவேஷனை உருவாக்கு’ எனச்சொல்லி...
அவர் அப்பாடலுக்கு சிச்சுவேஷனை உருவாக்கி சூப்பர் ஹிட் ஆனதும் உண்டு. 

கார்த்திக் ராஜா : மணி ரத்னம் பற்றி...

ராஜா :  ‘தென் பாண்டிச்சீமையில தேரோடும் வீதியில’...என்ற பாடல் ட்யூனை கேட்டு விட்டு  இன்னொரு ட்யூன் கேட்டார்.
‘ஆரோரோ ஆரிரோரோ’என வேறொரு ‘தாலாட்டு’ ட்யூனை உருவாக்கி பாடிக்காட்டினேன்.
கேட்டு விட்டு ‘நன்றாக இருக்கிறது...இதை டெம்போ ஏத்தி பாஸ்ட் ட்யூனா மாத்த முடியுமா’ எனக்கேட்டார்.
அந்த ட்யூனில் உருவானதுதான்...
‘ நிலா அது வானத்து மேல...
பலானது ஓடத்து மேல’ என்ற பாடல்.

மணி ரத்னத்துக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.
தளபதி படத்துக்கு ஒரு பாடலுக்கு ட்யூன் போட்டேன். 
வாலி பாடல் எழுதினார்.
நிறைய பாடல்களை ரிஜக்ட் செய்து அவர் செலக்ட் செய்ததுதான் ‘சின்னதாயவள் தந்த ராசாவே...
முள்ளில் தூங்கிய புது ரோசாவே’ என்ற பாடல்.
எனது தாயார் பெயரில் அந்தப்பாடலை வாலி உருவாக்கியதால்,
 உடனே தேர்வு செய்தார் மணி ரத்னம்.

கார்திக் ராஜா : கமல்ஹாசன் பற்றிச்சொல்லுங்கள்.

ராஜா : கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.
ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் செய்து அவரை பாட வைத்தேன்.
ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு பறவை’
அந்தப்பாடலில் அவரது குரலில் இருக்கும் ‘பிட்ச்சை’ மனதில் வைத்துதான் அப்பாடலில் வரும்  ‘ஆலாபனையை’ உருவாக்கினேன்.
பிசிறில்லாமல் அவரும் பாடினார்.

மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் 
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’  என்ற பாடல்.
இப்பாடலை  பாட, காலையில் மலையாளப்படத்தில் நடித்து விட்டு...மத்தியானம் வந்து பாடினார்.
அந்த மலையாள பாஷையின் தாக்கத்தில்தான் ‘பன்னீர் புஷ்பங்களே’ என்ற வரியை மலையாளத்தில் உச்சரித்திருப்பார்.
அந்த வரியை உற்று கவனித்தால் உங்களுக்கே தெரியும்.

கார்த்திக் ராஜா :  ‘இசை ராணி’ பர்வீன் சுல்தானா உங்களுக்கு பிடித்த பாடகியாயிற்றே!
அவரை உங்கள் இசையில் பாட வைத்து உள்ளீர்களா? 

ராஜா : மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘எனது இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர்.
பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, 
பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளை பாட வைத்து அப்பாடலை உருவாக்கினேன்.
இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் பாராட்டி சிலாகித்து பேசினார்.

 ‘பண்டிட் அஜய் சக்ரவர்த்தியை’  ‘ஹேராம்’ படத்தில் 
‘இசையில் தொடங்குதம்மா’ பாடலைப்பாட வைத்தேன்.

கார்த்திக் ராஜா : கோவையில் உங்களது அனுபவங்கள் ?

ராஜா : கோவையில் எனது காலடி படாத இடமே கிடையாது.
எனது அண்ணன் பாவலர் வரதராஜன்,பாஸ்கருடன் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக தெருத்தெருவாக பாடியிருக்கிறோம்.
இன்று கோவை மாறி விட்டது.
ஆனால் இந்த மண்ணில் எனது காலடித்தடம் அழிக்க முடியாதது.

கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன்.
அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது.



கோவையில் மட்டுமல்ல... ‘இளையராஜாவின் காலடித்தடம்’
தமிழ் கூறும் நல் உலகில் என்றும் அழியாமல் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 23, 2012

இளையராஜா கொன்னுட்டாரு.

நண்பர்களே...
நேற்று  ‘ஜெயமோகன் இலக்கிய வட்டம்’ கோவையில் நடத்திய விழாவுக்கு சென்றேன்.
இளையராஜாவைத்தவிர பேசிய அனைவரும் அவங்க ஏரியாவில வித்த
A4 ஷீட் அனைத்தையும் வாங்கி... எழுதி எடுத்திட்டு வந்து...
வாசிச்சு கொன்னுட்டாங்க.
 ‘ராஜா’வைத்தவிர மிக நன்றாக பேசியது...
மலையாளக்கவிஞர் ‘கல்பற்றா நாராயணன்’.
அவர் பேச்சும்...குரலும்  ‘சுந்தரமாயிட்டு’ இருந்தது.
அவரது குரலில் இருந்த ‘மனோகரம்’ மொத்த அரங்கையும் வசீகரித்தது.
அதையும்  மொழி பெயர்த்து பேசிறேன் பேர்வழின்னு ஒருத்தர் சாகடிச்சாரு.
நல்ல வேளை எங்கிட்ட துப்பாக்கி இல்ல.

இயக்குனர் ‘சுகா’ தனது பேச்சில் சுவாரஸ்யம் கொண்டு வர...
முடிந்தவரை முயற்சித்தார்.
 ‘சுகா அண்ணாச்சி’ எழுத்தில் இருக்கும் கவர்ச்சி பேச்சில் வரவில்லை.
ஆனால் ஒரு உண்மையை உரக்கச்சொன்னார்.
 “இலக்கியவாதிகள் நிறைய பேர் உள்ளும் புறமும் வேறாக இருக்கிறார்கள்.
எனவே சினிமாக்காரர்களை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை” 
என நேரடியாக போட்டு தாக்கினார் சுகா.
சபாஷ் அண்ணாச்சி...
 ‘இப்படித்தான் சரியான இடம் கிடைக்கும் போது வச்சு  ‘வெளுவெளுன்னு’  வெளுக்கணும்’.

சினிமா, நூல் இலக்கியத்தை விட ஒரு படி மேல்.
ஏழு கலைகளை உள்ளடக்கிய மாபெருங்கலை. 

விழா தொடங்கி முடியும் வரைக்கும் ஜெயமோகன் இலக்கிய வட்டத்துக்கும். இளையராஜா  ‘தீவிர ரசிகர்களுக்கும்’ ‘தள்ளுமுள்ளு’ நடந்து கொண்டே இருந்தது.
மேடையில் ‘அறுத்துக்கொண்டிருக்கும்போது’ இந்த ஸ்டண்ட் காட்சிகள்தான் சுவாரஸ்யமாக இருந்தது.
ஜெயித்தது ஜெயமோகன் வட்டமே.
 ‘தீவிர ரசிகர்களை’ கடைசி வரை மேடை ஏற விடவில்லை.
விட்டிருந்தால் அவ்வளவுதான்.
தெய்வத்துக்கு மலர் மாலையை பொன் மாலையாக்கும் பிசினஸ்தான் நடந்திருக்கும்.


இளையராஜா பேச்சு...சிம்பிள் & சூப்பர்...
 ‘கொன்னுட்டாரு’.

அவருக்கு முன்னால் பேசிய  ‘அறுவையின்’ மொழியிலிருந்தே துவங்கினார்.
இனி  ‘ராஜாவின்’ உரையின்  ‘ஹை லைட்ஸ்’...

“ எனக்கு முன்னால பேசியவர்,
முதலில் தோன்றியது பேச்சு.
இரண்டாவது எழுத்து.
மூன்றாவது இசை என்றார்.
நான் சொல்கிறேன்.
முதலில் தோன்றியது இசை.
இரண்டாவதும் இசை.
மூன்றாவதும் இசைதான்.
எல்லாமே இசைதான்.
மனிதன் காட்டுமிராண்டியா இருந்தப்ப ‘ஆ...ஊன்னு கத்தியிருப்பான்.
அது இசையில்லையா ?
எழுத்தில் இருப்பது இசையில்லையா?

யாருக்கு விருது கொடுப்பது என்று பேசி முடிவு பண்ணி பின் அறிவித்து கொடுப்பதற்கு பெயர் விருதா ?
[ யாரைச்சொருகுகிறார் என அரங்கு புரிந்து கை தட்டியது ]
நான் மத்திய அரசு விருதைச்சொன்னேன்.

கோயிலுக்குப்போனால் கூட மனசு ஒரு நிலையில் நிற்காது.
குரங்கு மாதிரி தாவிக்கொண்டே போகும்.
நான் என்னைச்சென்னேன்.
நீங்கள் எப்படி என்று எனக்குத்தெரியாது.

ஆனால் இசை உங்களை ஒரு முகப்படுத்தும்.
கட்டிப்போடும்.
கேட்டுப்பாருங்கள்...
[ பாடுகிறார் ]
ஜனனீ...ஜனனீ...
[ அரங்கு அதிருகிறது ]

அதன் பின் கவிஞர் தேவ தேவனை இரண்டு வரி வாழ்த்திப்பேசி அமர்ந்தார்.


இன்று இளையராஜாவின் இன்னிசைக்கச்சேரி மாலை 6.00 மணிக்கு
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது.
நான் போகிறேன்.
நீங்களும் வருகிறீர்களா!


Dec 22, 2012

இளையராஜா இன்று கோவை வருகிறார்.




விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” இன்று கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது
விருது வழங்கும் நிகழ்ச்சி
டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி
தொகுப்புரை

செல்வேந்திரன்
**************************************************************************************************************
நண்பர்களே !

இன்று மாலை 6.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் 
’இசை ஞானி’ இளையராஜா வருகிறார்.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் மற்றும் கவிஞர் தேவதேவன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வருகிறார்கள்.

நிச்சயம் இலக்கிய விருந்தும்,மருந்தும் கிடைக்கும்.
அனைவரும் வருக என அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.

Dec 21, 2012

கமல் வாடகை வீட்டில் வசிக்கிறார்!


நண்பர்களே...
சமீபத்திய நக்கீரன் இதழ் அதிர்ச்சிகரமான தலைப்பிட்டு வெளி வந்தது.
                                         .சொந்த வீடு இல்லை !
கடன் நெருக்கடியில் உலக நாயகன்!

செய்தியின் முழு விபரம் இங்கே...


தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என பன்மொழிப்படங்களில்
50 ஆண்டுகளாக இருக்கும் கமல்,
சுமார் 30 ஆண்டுகளூக்கு மேலாக கதாநாயகனாக நடித்து வரும் கமல் இதுவரை குறைந்தபட்சம் நூறு கோடி...இருநூறு கோடி மதிப்பில்
சொத்து சேர்த்து வைத்திருக்க மாட்டாரா என்ன?
ஆனால் கமலிடம் இல்லை என்பதுதான் உண்மை.

நடனம், எடிட்டிங், மேக்கப், காஸ்ட்யூம், ஸ்கிரிப்ட் எழுதுவது, டைரக்‌ஷன் என சினிமாவில் பல வேலைகளையும் கமல் கற்றுக்கொண்டதற்கு காரணம்,
தன்னை மேதாவியாக காட்டிக்கொள்வதற்காக அல்ல.

நடிகனாக ஜொலிக்க முடியாமல் போனால் டான்ஸ் மாஸ்டர் ஆகிடணும்!.
அதுவும் இல்லன்னா எடிட்டர் ஆகிடணும்!.
இப்படி ஏதோ ஒரு வகையில் சினிமாவில் மட்டுமே இருக்கணும் என்கிற நோக்கம் மட்டுமே கமலுக்கு.
இதனால்தான் சினிமா மூலம் சொத்து சேர்க்க வேண்டும் என்கிற ஆசை கமலுக்கு என்றுமே இருந்ததில்லை.

1980களில் வந்த  ‘சகலகலா வல்லவன்’... 
தமிழ் சினிமா வரலாற்றில் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.
தொடர்ந்து அப்படிப்பட்ட மசாலா படங்களை சொந்தமாக தயாரித்து
கோடி கோடியாய் லாபம் பார்த்திருக்க முடியும்.
ஆனால் கமலுக்கு வித்தியாசமான சினிமா மீதுதான் ஈடுபாடு.
மற்ற படாதிபதிகளுக்காகவே மசாலாவில் நடித்தார்.

கன்னட உலகில் மதிப்பு மிக்க இயக்குனர்களில் ஒருவரான புட்டண்ணா ‘சகலகாலா வல்லவன்’ பார்த்து விட்டு,
அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கை கொடுத்தார்.
“பிரமாதமான பொழுதுபோக்கு படத்தை தந்தீட்டீங்க!
வசூலில் இப்படம் சாதனை புரியும்.
ஆனா அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களின் அறிவை மழுங்கடிக்கிற வேலையை தொடங்கி வச்சிருக்கிங்க” எனச்சூடாக சொன்னார்.

இந்த விமர்சனம் கமலுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியைக்கூட அப்போது ஏற்படுத்தியது.

வித்தியாசமான சினிமாவின் தாக்கத்தால்,
கண் பார்வையற்ற இளைஞனின் கதையான ‘ராஜபார்வையை’
அடுத்தவர்கள் பணத்தில் தயாரிக்காமல்
‘ராஜ் கமல் இண்டர்நேஷனலை’ தொடங்கி  ‘முதல் படத்தை’ தயாரித்தார்.
இந்த வித்தியாச முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.

‘அபூர்வசகோதரர்கள்’  பெற்றவர்களை கொன்றவர்களை பழி வாங்கும் அரதப்பழசான கதை.
அதிலும் ‘குள்ள அப்பு’ கேரக்டரை புகுத்தி புதுமைப்படைப்பாக உருவாக்கினார்.
இந்த படத்தில் மிகப்பெரிய செலவில் 20 நாட்களாக எடுக்கப்பட்ட காட்சிகளை அப்படியே தூக்கி வீசினார்.
காரணம் கமலுக்கு திருப்தியில்லை.

“இவ்வளவு செலவு செய்து அப்படியே தூக்கி வீசிட்டீங்களே” என
கமல் நண்பர்கள் ஆதங்கப்ப்ட்டனர்.

“கவிதை எழுதறவன் ஒரு நல்ல கவிதை அமையிற வரைக்கும் பேப்பர்ல எழுதி எழுதி சுருட்டி வீசுவான்.
அந்த பேப்பர் மாதிரிதான் எனக்கு ஃபிலிம்.
என்னையே திருப்தி படுத்தாத காட்சிகள் மக்களை எப்படி திருப்தி படுத்தும்?” 
என விளக்கம் சொன்னார் கமல்.

பெரம்பலூர் மாவட்ட கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார்
ஒரு முறை கமலின் நண்பரான பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான ஞானசம்பந்தனிடம்,
“சார் நீங்களாவது சொல்லக்குடாதா?
நேத்து வந்த நடிகர்கள் கூட கல்யாண மண்டபம், டீ எஸ்டேட்,
ஸ்டார் ஹோட்டல்னு ஏகப்பட்ட பிசினஸ் பண்ணுறாங்க.
எங்க தலைவர் சினிமாவுக்காக பொருளாதாரத்தை எப்பவும் இழந்துகிட்டே இருக்காரே!” என ஆதங்கப்பட்டார்.

கமலின் குணத்தை நன்கு அறிந்த ஞானசம்பந்தன்,
“அதுதான் கமல்” என்றார்.

ரசிகர்களின் கவலை அறிந்த கமல் ஒரு நிகழ்ச்சியில் விளக்கம் சொன்னார்.
“கார்ல வந்துகிட்டு இருக்கேன்.
தீடிர்னு மேம்பாலம் இடிஞ்சு விழுந்திருச்சு.
அதுக்காக என்கிட்டே கார் இருக்கு.
நான் பறந்து போவேன்னு சொல்லிகிட்டு இருக்க முடியுமா?
கார் எந்த அளவுக்கு தேவையோ, அதே போல் தேவைக்கேற்ப பணமும் போதும்”

 “ஒரு மனிதன் எந்தத்துறையில் சம்பாதிக்கிறானோ...அந்தத்துறையிலேயே பணத்தை செலவிடும்போது அந்தத்துறை வளர்ந்து கொண்டேயிருக்கும்.
இந்தியாவிலே வெகு சிலரே தான் சம்பாதித்த துறையிலேயே செலவிடுகிறார்கள்.
அதில் முக்கியமானவர் கமல்” என அகில இந்திய வர்த்தகர் சங்கம் கமலைப்பற்றி மதிப்பிட்டு ‘வாழும் வரலாறு’ என பாராட்டியது.

இப்படியெல்லாம் புகழப்படும் கமலின் இன்றைய நிலமை என்ன தெரியுமா?
கமலுக்கு ஒரு சொந்த வீடு கூட கிடையாது

வீட்டிலேயே திரையரங்க வசதியோடு கமலின் ரசனைக்கேற்ப இருந்தது அவரின் ஆழ்வார் பேட்டை வீடு.
அந்தப்பகுதியின்  'லேண்ட்மார்க்காக' விளங்கியது.
சினிமாவில் ஏற்பட்ட கடனுக்காக அந்த வீட்டை விற்று விட்டு நீலாங்கரையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

*********************************************************************************
கமல் தனது ஆழ்வார் பேட்டை வீட்டிலேயே உள்ள திரையரங்கில்
 ‘உலகசினிமா திரைப்பட விழா’ பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தினார்.
1993-1994 காலமது.
மறைந்த அனந்து, நடிகர் ராஜேஷ் உள்ளிட்ட மிக நெருக்கமான நண்பர்களை மட்டும் வரவழைத்து திரையிட்டார்.
பெர்க்மன்,  கோடார்டு, பெலினி, புனுவல் போன்ற  ஜாம்பவன்களை தேர்வு செய்து அவர்களது படைப்புகளை திரையிட்டு விவாதித்தார்கள்.
அதில் கலந்து கொண்டவர்களில் எனது நண்பரும் ஒருவர்.

கமல் பற்றி அவரது நினைவு கூறல்.
“ கமல் பொதுவாக, தனக்கும், நண்பர்களுக்கும், 
சில சமயம் ரசிகர்களுக்கும் பரிட்சை வைத்து வேடிக்கை பார்ப்பார்.
கற்றுக்கொள்வார்.

ஒரு நாள், 
பெலினியின்  'ஜூலியட் ஆப் த ஸ்பிரிட்ஸ்' [ Juliet Of the Spirits \ 1965 ],
'அமர்கார்டு' [ Amarcord \ 1973 ] என்ற திரைப்படங்களை தொடர்ச்சியாக திரையிட்டார்.
அதில் ‘அமர்கார்டு’ படத்தில் ஒரு காட்சி...
பனி நிறைந்த பிரதேசம்.
மயில் ஒன்று நடந்து வரும்.

பின்னால் இந்த காட்சி பற்றி பேச்சு வந்தது.
கமல் அமைதியாக இருந்தார்.
எல்லாம் எனக்கு தெரியும் என கமல் எப்போதும் ஆட மாட்டார்.
தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்றே கூறுவார்.
நண்பர்கள் எந்த மாதிரி கருத்தாக்குகிறார்கள் என அமைதியாக கவனிப்பார்.

பனிக்காலம்  ‘கஷ்டத்தை’ குறிக்கும்.
மயில் பசுமைப்பகுதிகளில் வசிக்கும் பறவை.
எனவே  மயில் ‘வசந்த காலத்தை’ குறிக்கிறது.
P. B. Shelley =  “Ode to the West Wind”= If Winter comes, 
can Spring be far behind?
என்ற ஷெல்லியின்  வரிகளை காட்சிப்படுத்தி 'நம்பிக்கையை' குறிக்கிறார் பெலினி எனச்சொன்னேன்.
இந்த  ‘வாசிப்பை’ கமல் பாராட்டினார்.

ஆழமான சினிமாவின் மாணவனாக தன்னை கருதுபவர்.
யாரையும் எப்போதும் குறைத்து மதிப்பிட மாட்டார்.
கற்றுக்கொள்வதில் என்றும் பெரும் ஆர்வம் கொண்டிருப்பவர்.
இன்று வரை சினிமாவில் கற்றதை பரிட்சித்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
கிரேட் பர்ஸன்”. 

*********************************************************************************

சினிமாவில் இருக்கும் கள்ளப்பணமும் கமலிடம் இல்லை.
வருமானத்தை உண்மையான கணக்கு காட்டி வருமான வரி கட்டுபவர்.

ஒரு பெரிய அரசியல் தலைவர் வீட்டு வாரிசு தயாரித்தப்படத்தில் இயக்கத்தை தவிர பல பொறுப்புகளை செய்தார்.
இதற்கான சம்பளத்தை பாதி கருப்பாகவும்....பாதி வெள்ளையாக மட்டுமே தருவோம் என அந்த நிறுவனம் சொல்லி விட்டது.

தலைவரை சந்தித்து தனது பாலிஸியை சொன்னார் கமல்.
வெள்ளையாக தந்த பிறகே அந்த சம்பளத்தை வாங்கினார்.
[ படம் : மன்மதன் அம்பு என நினைக்கிறேன் - உலகசினிமா ரசிகன்]

ஆந்திராவைச்சேர்ந்த பொட்லூரி வி. பிரசாத் தனது பி.வி.பி. நிறுவனம் மூலமாக  ‘விஸ்வரூபம்’ படத்தை துவங்கினார்.
படம் பட்ஜெட் 50 கோடியைத்தாண்ட சுணக்கம் காட்டியது பி.வி.பி.
“நானே தயாரித்து கொள்கிறேன்.
படம் ரீலிசுக்கு முன் உங்கள் பணம் செட்டில் செய்யப்படும்” எனச்சொல்லி பி.வி.பி.யுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் கமல்.

ஜனவரியில் ரீலிஸ் எனும் நிலையில் பி.வி.பி.க்கு செட்டில் பண்ண பணத்துக்கு அலைகிறார்.
பணம் செட்டில் பண்ணாவிட்டால் படத்தை ரீலிஸ் செய்ய முடியாது.


“அர்ப்பணிப்புகள் வீண் போகாது.
எத்தனை இடைஞ்சல் வந்தாலும் அதையெல்லாம் வென்று 
கமல் தொடர்ந்து  'விஸ்வரூபம்' எடுப்பார்” என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

அதையேதான் கமலும் சொல்கிறார்.
“ரசிகர்களின் அன்புதான் எனது ஆணி வேர்.
அச்சாணி பலம்.
இந்த பலம் இருக்கும் வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்வேன்”

ஈடற்ற...இணையற்ற ஒரு மாபெருங்கலைஞன் சொந்த வீடற்ற நிலையிலும் துணிச்சலுடன் இப்படி  ‘தொழில் தர்மம்’ சொல்லியிருப்பது...
ஒவ்வொரு துறையிலும் தனித்துவமாக சாதிக்கத்துடிப்பவர்களுக்கான தூண்டுதல்.

நன்றி... நக்கீரன் பத்திரிக்கைக்கு.
காணொளி காண்க...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 20, 2012

கும்கி - உலகசினிமாவா?... கமர்சியல் சினிமாவா?

நண்பர்களே...
‘கும்கி’ என்ற பட்டத்தை நமீதாவுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கி இருந்தேன்.
‘கும்கி’ பற்றி அரைகுறை புரிதலில் வழங்கிய பட்டம் அது.
கும்கி என்ற  படமாவது சரியான புரிதலோடு எடுக்கப்பட்டிருக்குமா ?
என்ற கேள்வியுடன்தான் படம் பார்க்கச்சென்றேன்.

வார நாட்களில் இரவு 10 மணி காட்சிக்கு...
1000 பேருக்கு மேல் அமரும்  'கோவை அர்ச்சனா' திரையரங்கு ஹவுஸ்புல்.
‘கும்கி’ படம் சூப்பர் ஹிட்.
சந்தேகமே இல்லை.


சிவாஜி கணேசனுக்கு ஒரு பராசக்தி போல்...
விக்ரம் பிரபுவுக்கு இப்படம் அமைய வாய்ப்பிருந்தும் அமையவில்லை. இப்படம் அத்தகைய தகுதியை அடைய முயற்சிக்கவேயில்லை.

அகிரா குரோசுவாவின் ‘செவன் சாமுராயை’ தழுவி நிறைய படங்கள் வந்திருக்கின்றன.
உ.ம் : மெக்னிபெசண்ட் செவன், பக்ஸ் லைப் [கார்ட்டூன் படம்]
 ‘கும்கி’யின் கதை,  ‘செவன் சாமுராய்  இன்ஸ்பிரேஷனில்’ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நன்றாக கவனிக்க....
காப்பி அடிக்கப்படவில்லை.
இதற்காக பிரபு சாலமோனுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

‘தாங்க் யூ ஜீசஸ்’ என கொட்டை எழுத்தில் டைட்டில் போடுவது எதற்காக ?
படத்தில் கேரள பாரஸ்ட் ஆபிசருக்கு ‘மோசஸ்’ எனப்பெயரிடக்காரணம் ?
‘சீனு ராமசாமி’ நீர்ப்பறவையை  கிருத்துவ மதப்பின்னணியில் படமெடுத்தது ஆரோக்கியம்.
பிரபு சாலமோன்  செய்தது மதப்பிரச்சார நெடி. 


யானை, மலைவாழ் மக்கள், அதிகார வர்க்கம், என முக்கோணத்தில் பயணப்பட்ட திரைக்கதை  ‘காதல்’ என்ற வழக்கமான குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொண்டது.
அற்புதமான உலகசினிமாவாக்கப்படவேண்டிய கதையும் கதைக்களமும் இருந்தும் சாதாரணக்காதல் கதையாக்கி விட்டார் இயக்குனர்.

தம்பி ராமையா சில இடங்களில் எரிச்சலைடைய வைத்தாலும் பல இடங்களில் படத்தை அவர்தான் நகர்த்துகிறார்.
‘கவுரவம்’ படத்தில் இடம் பெற்ற நாகேஷ் காமெடியை அப்படியே காப்பியடித்து எரிச்சல் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.


‘நானும் செத்துருவேன்’ என்ற வசனத்தின் மூலம் தனது காதலை வெளிப்படுத்தும் இடத்தில் இயக்குனரோடு கை கோர்த்திருக்கிறார்
லஷ்மி மேனன்.
அழகும் நடிப்பும் ஒருங்கே வரப்பெற்ற இந்த வனதேவதையை தமிழ் ரசிகர்கள் ஆராதிப்பதில் ஆச்சரியமில்லை.


ஹாலிவுட் நேர்த்தியில் இருந்த படத்தின் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒரு ஸ்டில் போட்டாகிராபர்.
பிரபு சாலமோன்தான் அவரை முதன்முதலாக  ‘மைனா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
சூப்பர் 35 எம்.எம். கேமராவை பயன்படுத்தி,
தமிழ்நாட்டில் தேனி மற்றும் குரங்கனி,
கேரளாவின் அடர்ந்த காடுகள்,
கர்நாடகா ஜோக் பால்ஸ்,
ஆந்திராவின் மஞ்சள் பூக்கள் பிரதேசம் என இயற்கை வண்ணத்தை அள்ளி நிறைத்து விட்டார் வெள்ளித்திரையில்.
குறிப்பாக ஜோக் பால்சை,  ‘அகிலா கிரேன்’ உதவியோடு அவர் படமாக்கிய விதம் பிரம்மாண்டம்.
அச்சமில்லை அச்சமில்லை படத்தில் நடித்த குற்றால அருவி...
புன்னகை மன்னனில் நடித்த அதிரப்பள்ளி அருவி...
ரோஜாவில் நடித்த ஒகனேக்கல் அருவி...போல்
மிகவும் கவர்ந்து விட்டது  ‘ஜோக் பால்ஸ்’.

படத்தின் இறுதிக்காட்சியில் ‘கொம்பன் யானை’ விழும் பள்ளத்தை இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது.
அதே இடத்தை, வேறொரு காட்சியில்... பகல் காட்சியாக  ‘அகிலா கிரேன்’ உதவியோடு படமாக்கி ஆடியன்ஸ் மனதில் விதைத்து வித்தை புரிந்ததை மிகவும் ரசித்தேன்.


கலை இயக்குனர் வைர பாலன் தேனி பகுதியில் மலைகிராமத்தை சிருஷ்டித்ததில் நிஜத்தன்மை இருக்கிறது.
தோட்டத்தரணி,சாபு சிரில்,ராஜீவன் போல் உயர்ந்த இடத்தை அடையும் தகுதி இவருக்கு இருக்கிறது.

என்னிடம் ஆபிஸ் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தவர்,
இப்படத்தில் பணி புரிந்திருக்கிறார்.
அவர் சொன்ன தகவல்.
தேனியில் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஆறு ஏக்கரில் நெல் வயல், பூந்தோட்டம் பயிர் செய்து படமாக்கினார்களாம்.
ஐந்து கோடி முப்பது லட்சம் படத்தின் மொத்த செலவு.
பிரபு சாலமோனுக்கு கிடைத்த லாபம் வெறும் இருபது லட்சமே.
ஆனால், திருப்பதி பிரதர்ஸ் & க்ரீன் ஸ்டூடியோ  ‘ஞானவேல்’ தலாஆறு கோடி சம்பாதித்து உள்ளனர்.
தினமும் ஒரு யானைக்கு வாடகை 25,000 + உணவு 25,000 = 50,000 ரூபாய் செலவு
ஒரு யானையை மட்டும் 70 நாள், சூட்டிங்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

யானை நடிப்பதில் சிவாஜி,கமல் மாதிரி பின்னி பெடலெடுக்குமாம்.
ஒரே டேக்தானாம்.
“ யானை குழந்தை மாதிரி...
சூட்டிங்கில் கஷ்டப்படுத்தவேயில்லை” .

விக்ரம் பிரபு ஒரு மாதம் தங்கியிருந்து கும்கி யானைகளிடம் பயிற்சி பெற்றாராம்.
ஆச்சரியமில்லை.
‘சிவாஜி’ பரம்பரை அல்லவா !

உலகசினிமாவாக எடுத்திருக்ககூடிய சப்ஜக்டை கமர்சியல் சினிமாவாக்கி
பிரபு சாலமோன் பெற்றது வெறும் இருபது லட்சம்தானே.
உலகசினிமாவாக எடுக்கப்பட்டிருந்தால் இதை விடப்பணமும்,பெயர், புகழ் கிடைத்திருக்குமே !

‘லைப் ஆப் பை’ படத்தில்  ‘இன்டர் ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிள்’ சிச்சுவேஷனை  ‘இன்ட்ரா ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிளாக’ அமைத்திருக்கிறார்.
இயக்குனர்  ‘ஆங் லீ’.

‘கும்கி’படத்தில்  ‘இன்ட்ரா - ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிளை’
‘இன்டர் - ஸ்பெஸிபிக் ஸ்ட்ரக்கிளாக’ அமைத்திருக்கிறார்
இயக்குனர் பிரபு சாலமோன்.

‘இன்டர் - இன்ட்ரா ஸ்பெசிபிக்’ விளக்கம் காண ஹேராம் பதிவிற்கு செல்லுங்கள்.
ஹேராம் = 028 பதிவைக்காண... 

'Man - Made = Catastrophe'
‘Man V/S Animal Conflict’ ஆகியது சரியாகப்படவில்லை.
‘தீமட்டைஸ்’  பண்ணுவதில்  ‘பிலாஸபிகல் எரர்’ [Philosophical Error ] இருக்கிறது.

யானை சைவம்.
மனிதனை சாப்பிட ஊருக்கு வரவில்லை.
யானையின் ஏரியாவை மனிதன் ஆக்கிரமித்ததால் அதற்கு தீர்ப்பெழுத வருகிறது.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டெல்லாம் தெரியாது.
ஆனால் இயக்குனர் ‘கொம்பனை’ மட்டும் வில்லனாக்கி விட்டார்.
வில்லனாக்கப்பட வேண்டிய  ‘மனிதனை’ விட்டு விட்டார்.

" Earth belongs to all Species"

திராபையான கிராபிக்ஸ்,பின்னணி இசை, கருத்தாக்கம் என பல விஷயங்கள்  நெருடினாலும் படம் பிடித்திருந்தது.
காரணம் சிவாஜி,பிரபு மேல் உள்ள தனிப்பட்ட ப்ரியமா !
நாம் மிகவும்  நேசிக்கும் யானையா!
அல்லது கண் கவரும் குறிஞ்சி நில அழகா தெரியவில்லை.
ஆனால் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும்.
படத்தின் கிளைமாக்ஸ்.
சான்சே இல்லை.
ஐரோப்பிய படங்களின் ‘ஒப்பன் எண்ட் கிளைமாக்ஸ்’ இப்படத்தில் தெளிவாக கையாளப்பட்டிருக்கிறது.
‘மாரல் டென்சன்’ பவர் புல்லாக இருந்தது.
உதிரி பூக்கள்,மூன்றாம் பிறை, ஹேராம்,காதல்,வழக்கு எண்18 \ 9
இந்த படங்களின்  ‘கிளாசிக் கிளைமாக்ஸ்’ அருகில் இப்படத்தின் கிளைமாக்ஸை சேர்க்கலாம்.
இத்தகைய கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவை ஒரு படி மேல தூக்கி நிறுத்தும்.

HATS OFF PRAPHU SOLOMON.

இரண்டு முறை பார்த்து விட்டேன்.
தயவு செய்து இப்படத்தை தியேட்டரில் பாருங்கள்.

படத்தின் டிரைலரை காணொளியில் காண்க...
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.







Dec 16, 2012

நீதானே என் மாங்கா மடையன்.



                                                                                                                                                           
அன்புள்ள கவுதம் வாசுதேவ மேனனுக்கு,
ரசிகனை மாங்கா மடையன் என எண்ணி விட்டீர்கள்.
சரக்கு இல்லாமல் எங்கள் ஊரில் டீக்கடை நடத்த முடியாது.
டீயின் மூலப்பொருள் தேயிலையா...புளியங்கொட்டையா என எளிதில் கண்டு பிடித்து ஒதுங்கி விடுவோம்.
உங்கள் கடையில் நல்ல டீ குடித்திருக்கிறோம்.

அடுத்த முறை  ‘நல்ல டீ’தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
விடை பெறுகிறேன்.

அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.

Dec 15, 2012

கடவுள் பாதி...மிருகம் பாதி...

நண்பர்களே...
நான் இந்த வலையுலகத்தில் எழுதிக்கொண்டிருப்பது யாருக்காக ?
எனக்காகத்தான்.
ஏனென்றால்,
எனது  ‘கிரியேட்டிவிட்டியை’ உயிர்ப்போடு இயங்க வைப்பது
வலையுலகம்தான்.

உலகசினிமாவின் கதையை சொல்லி வியாபாரம் செய்யும் சாதாரண வியாபாரி நான்.
 ‘உலகத்தமிழ் மாநாட்டுக்காக’ கோவை வந்திருந்த,
எனது நண்பர் திரு .செந்தில் ராஜ் கொடுத்த ஊக்கத்தில்தான்  பதிவெழுத ஆரம்பித்தேன்.
நண்பர் செந்தில் ராஜ் ‘இடுக்கண் களையும் நட்புக்கு’ இலக்கணமானவர்.
அவர் வலையுலகில்  ‘தமிழ் குறிஞ்சி’ என்ற இணைய பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.
நான் கமலைப்பற்றி  ‘சகலகலா வல்லவர்’ என்ற 52 வாரத்தொடரை தயாரித்து விளம்பரதாரர் சரியாக அமையாததால் நஷ்டம் அடைந்திருந்தேன்.
அவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,லண்டன் என உலகம் முழுக்க அத்தொடரை சாட்டிலைட் டிவி,கேபிள் டிவி என வியாபாரம் பண்ணி
நஷ்டத்தை ஈடு கட்டி சிறு லாபத்தையும் ஈட்டி கொடுத்தார்.

நண்பர் புண்ணியத்தால்,
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்த போது உலகசினிமாக்களை  ‘அறிமுகம்’ மட்டுமே செய்ய ஆரம்பித்தேன்.
விமர்சனம் செய்யவிரும்பவில்லை.
காரணம், அது மிகக்கடினமான பணி.
சொகுசாக உலகசினிமாவை அறிமுகம் செய்து கொண்டு பயணித்தேன்.

பதிவெழுத ஆரம்பித்தபோது வரவேற்று மிகப்பெரிய அறிமுகம் கொடுத்தது
பதிவர்  ‘கருந்தேள்’ ராஜேஷ்தான்.

மதி செய்த விதியால்,
ஹேராம் திரைப்படத்தை முதலில் விமர்சனம் எழுத ஆரம்பித்தேன்.
வந்தது வினை.
எதிர்ப்பு வரிசை கட்டி வந்து, வலையுலகத்திலுள்ள  ‘வசையுலகை’
புரிய வைத்தது..
அதே நேரத்தில், ஆதரவு  ‘ஏகே 47கள்’ அத்தனையையும் சிதறடித்தது.

இறுதியாக வந்த சண்டையில் ,
என்னுள் இருந்த  ‘கடவுளை’க்கடந்து... ‘மிருகம்’ மட்டும் வெளியே வந்தது.
எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த சண்டையில் என் கடையை நேற்று முதல் மூடி விட்டேன்.
இத்தருணத்தை மிகுந்த சந்தோஷமாக உணருகிறேன்.
10% வருத்தம்...90% மகிழ்ச்சி.
கடையை மூடி விட்டு  ‘சிவாஜியை’ 3டியில் பார்த்தேன்.
இன்று  ‘நீதானே என் பொன் வசந்தம்’.

10% வருத்தம்  =  எதையோ  ‘மிஸ்’ பண்ணிய உணர்வு .
காரணம்,
உலகசினிமாவை ஊர் ஊராகச்சென்று விற்ற போது எனக்கு கிடைத்த நட்பு வட்டாரம்.
பத்திரிக்கையாளர்கள், இலக்கியவாதிகள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், கம்யூனிஸ்ட் சித்தாந்த வாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவிகள் என... அடேயப்பா!.எவ்வளவு பேர்!!.
இன்று எனக்கு  ‘உலகசினிமா’ மூலம் உலகம் முழுக்க சொந்தங்கள் இருக்கின்றனர்.
பதிவுலகின் மூலமாக ‘உலகசினிமா சொந்தங்கள்’ இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கும்.


இனி...
நான் ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.
‘ஜோர்பா த க்ரீக்’ 
[ ZORBA The Greek \ 1964 \ Written by : Nikos Kazantzakis \ Directed by :Mihalis Kakogiannis ] என்ற உலகசினிமா அல்லது நாவல் படித்தவர்களுக்கு
சட்டென புரிந்திருக்கும்.
ஜோர்பாவுக்கு கடந்த காலமும் கிடையாது.
வருங்காலமும் கிடையாது.
நிகழ்காலத்தில் ரசித்து ருசித்து வாழ்பவன்.
“நேற்று இல்லை...நாளை இல்லை...எப்பவுமே ராஜா”.
நான்  ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Dec 13, 2012

ஹாலிவுட் பாலாவின் ‘விஸ்வரூபம்’

நண்பர்களே...
நேற்று ஹாலிவுட் பாலாவின் பதிவை பார்த்து வியந்து விட்டேன்.
கமலின் ‘டிடிஎச்’ ஒளிபரப்பு முயற்சிக்கு வலுவூட்டும் விதத்தில் மிகச்சிறந்த பதிவை எழுதி கர்ஜித்திருக்கிறார்.


பாலாவின் பதிவை நிறைய பேரைச்சென்றடைய வேண்டும் என்ற ஆவலில் அவரிடம் அனுமதி வேண்டி தொடர்பு கொண்டேன்.
இன்னும் பதில் வராத நிலையில்,
‘அவசர நிலை’ கருதி இப்பதிவை வெளியிடுகிறேன்.
காரணம் ஹாலிவுட் பாலாவின் பதிவு,
யாருக்கு போய்ச்சேர வேண்டுமோ அவர்களுக்குப்போய் சேர வேண்டும்.


இன்று காலை தினத்தந்தியில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கத்தை சேர்ந்த காயல் இளவரசு கமலுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
டிடிஎச்சில் ஒளிபரப்பினால், அதை வீடீயோ புரொஜக்டரில் இணைத்து தமிழ்நாடெங்கும் பட்டி தொட்டியில் இலவசமாக பொதுமக்களுக்கு திரையிடுவோம் என மிரட்டி இருக்கிறார்.
அப்பட்டமான  ‘சட்ட மீறலை’ எச்சரிக்கையாக விடுத்திருக்கிறார்.

காயல் இளவரசு  ‘உஷார் பார்ட்டி’.
கேபிள் டிவியில் ஒளிபரப்புவோம் என எச்சரிக்கவில்லை.
கேபிள் டிவி உரிமை  ‘ஜெயா டிவிக்கு’ விற்கப்பட்டது அவருக்கு தெரியும்.

கிராமத்தில் பெரியவங்க சொல்வாங்க...
நரிக்கு நாட்டாமை கொடுத்தா,  ‘கிடைக்கு’ இரண்டு ஆடு கேக்குமாம்.
[கிடை = ஆடுகளை மொத்தமாக அடைத்து வைக்கும் இடம்.]

விஸ்வரூபம் படத்துக்கு தினமும் புதிது புதிதாக நாட்டாமைகள் முளைத்துக்கொண்டே வருகின்றனர்.
ஆனால்  ‘அம்மாவிடமிருந்து’ ஒரு அறிக்கை வந்தால் எல்லா நாட்டாமைகளும் பம்மி  ‘டம்மியாகி’ விடும்.
 ‘தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களும் அரசுடமையாக்கப்படும்’

ஹாலிவுட் பாலா பதிவைப்படிக்க இங்கே செல்லவும்.

கமலின் டிடிஎச் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றொரு இணையக்கட்டுரை.
அடுத்த பதிவில் சந்திப்போம்.

Dec 11, 2012

‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.

நண்பர்களே...
போன பதிவில் என் மீது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
பேஸ் புக்கில் கூறிய குற்றச்சாட்டை படித்திருப்பீர்கள்.
 ‘காப்பித்திலகம்’கருந்தேள் குறிப்பிட்ட ஆங்கிலப்பதிவை படிக்கச்சொல்லி ஹேராம் = 003வது பதிவிலேயே லிங்க் கொடுத்திருந்த செய்தியை வெளியிட்டு  
‘காப்பித்திலகம்’ கருந்தேளின் பொய் பிரச்சாரத்தை முனை முறித்து விட்டிருந்தேன்.


ஹேராம் = 003 பதிவில் ஹேராம் ஆங்கில விமர்சனங்களை படிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளும்...இணைப்பும் இதோ...


விக்கிப்பீடீயாவில் ஹேராம் பற்றி மிகச்சிறந்த விமர்சனம் இணைத்துள்ளார்கள்.
தயவு செய்து அதை முழுக்க படித்து விடுங்கள்.

1. இருபது சேப்டர்கள் உள்ள மிக நீண்ட ஆய்வு இது....
http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

2. அமெரிக்க பேராசிரியரின் பதிவு இது....
http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html


3. எனது ஹேராம் பதிவுகள்.

எனது பதிவையும் உள்ளடக்கிய மூன்று பதிவுகளுமே ‘ஹேராம்’ திரைப்படத்திற்கு  
'Bun & Butter' மாதிரி   'Complimentary'தான்.
ஹேராம் பதிவுகளுக்கிடையில் 'Conflict' ஆக்க முயற்சி செய்த 
 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் பேராசை பலிக்காமல் அம்மணமாகி விட்டது.

ஆனால் இந்த  ‘காப்பித்திலகம்’ கருந்தேள், 
எனது ஹேராம் பதிவையும் படிக்கவில்லை...
 ‘செவன்த் ஆர்ட்’ எழுதிய ஹேராம் பதிவையும் படிக்கவில்லை என தெளிவாகிறது.
இரண்டையும் படித்திருந்தால் எனது பதிவுகள் வேறுபட்டிருக்கும் உண்மை தெரியும்...புரியும்.

ஆனால் ஒன்று... 
எனது மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியில் ‘செவன்த் ஆர்ட்’  எழுதிய ஹேராம் பதிவை பாராட்டி விட்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.

நான் எழுதிய ஹேராம் = 001 பதிவில்  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் போட்ட கமெண்ட் இதோ...

படத்துல வர்ர முஸ்லிம் டைலர் கொலையாளி. முஸ்லிம்கள் தெளிவா ஸ்கெட்ச் போட்டு கழுத்தை அறுப்பானுங்க. அய்யரு ஈரோ பாலைவனத்துல டுப்பாக்கியோட போஸ் குடுப்பாரு. அதாவது பாப்பான் பொங்கிட்டானாம். ஆரெஸ்ஸெஸ் மானிஃபெஸ்டோல இந்தப்படத்தைத்தான் பரிந்துரைக்கிறாங்களாமே? பெர்க்மேன், ஃபெலினியெல்லாம் இந்தப் படத்த நல்லவேளை பார்க்கல. பார்த்திருந்தா பிலிம் ரோல்லயே தொங்கிருப்பாங்க

 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் காழ்ப்புணர்ச்சியும், சுய முரண்பாடும் 
இப்போது விளங்குகிறதா ?. 

கருந்தேளுக்கு காப்பித்திலகம் என பட்டம் கொடுத்த காரணம் இதோ...

‘நாட் ஒன் லெஸ்’ [ Not One Less  \ 1999 \ Chinese \ Directed by : Zhang Yimou ] என்ற திரைப்படத்தை  பார்க்காமலேயே, 
விக்கிப்பீடீயாவை மொழிபெயர்த்து பதிவெழுதியது ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
கூடவே  ‘மாவோ’ பற்றிய எதிர்மறையான கட்டுரையையும் மொழி பெயர்த்து
ரெண்டையும் இணைத்து இப்படம் மாவோ செய்த அட்டூழியங்களை எடுத்துக்காட்டுகிறது என கன்னாபின்னாவென்று உளறி பதிவு போட்டிருந்தது.

 ‘மாவோ’ இன்றி  ‘மக்கள் சீனம்’ இல்லை.
மாவோவை பற்றித்தெரியாமலே சீனா வரலாறை பற்றிப்பேச முயற்சித்த உலகிலேயே முதல் வடி கட்டின முட்டாள் ‘காப்பித்திலகம்’ கருந்தேள்தான்.  

‘நாட் ஒன் லெஸ்’ என்ற திரைப்படத்தை எனது சொந்த செலவில் கோவையில் திரையிட்டு அப்படத்தை ஆய்வு செய்து ஏற்கெனவே பேசியிருந்தோம்.
விழாவில் கோவையிலுள்ள மிகப்பெரிய கம்யூனிஸ்ட் மேதைகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
 ‘மாவோவை’ பிடிக்காதவர்கள் கூட அவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் பேசிய அனைவரும் இப்படம்  ‘மாவோவின்’ பாதையிலிருந்து சீனா விலகிச்சென்றதன் சீரழிவை பேசுகிறது என்ற கருத்தையே வழி மொழிந்திருந்தனர்.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள்  ‘நாட் ஒன் லெஸ்’ படத்தை பார்க்காமல், 
விக்கிப்பீடீயாவை அப்படியே காப்பியடித்து பதிவெழுதிய கருந்தேளின் வண்டவாளத்தை தெரிந்து கொண்டாலும்,
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
 ‘நாட் ஒன் லெஸ்’ பதிவின் பின்னூட்டத்தில்... படத்தின் மையக்கருத்தை எடுத்துரைத்தேன்.
நான் தெரிவித்த கருத்தை வழக்கம் போல் காட்டுத்தனமாக எதிர்த்தது.
கருந்தேளின் நண்பர் கணேசன் என்பவர் எனது வாதத்துக்கு ஆதரவு தெரிவித்து,
வலுவூட்டவே ஜகா வாங்கி விட்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
 “மாவோ இருந்த காலத்தில் நான் பொறக்கவேயில்லை” என்ற  ‘சொத்தை வாதத்தை’ வைத்து விவாதத்தை முடித்துக்கொண்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் விக்கிப்பீடீயாவை காப்பியடித்ததை எப்படி கண்டு பிடித்தேன் என்பதை சொல்கிறேன்.
 ‘நாட் ஒன் லெஸ்’ படத்தில் ஒரு அழகான மலை கிராமம் வரும். 
அதன் தலைவராக ஒரு காரெக்டர் வரும்.
நீங்கள் இப்படத்தை பார்த்து பதிவெழுதினால் அந்த காரெக்டரை எப்படி குறிப்பிடுவீர்கள்?.
பஞ்சாயத்து தலைவர், கிராமத்தலைவர் அல்லது ஊராட்சித்தலைவர்... 
இப்படி ஏதாவது ஒன்றை குறிப்பிடுவீர்கள்.
ஆனால் இந்த  ‘காப்பித்திலகம்’ மேயர் என குறிப்பிட்டது.
இந்தியாவில், எந்த கிராமத்தில் தனது தலைவரை மேயர் என்று குறிப்பிடுகிறார்கள் ?.
இந்த  ‘காப்பித்திலகம்’ விக்கிப்பீடீயாவில்  ‘மேயர்’ எனக்குறிபிடப்பட்டு இருந்ததால்,
கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே தனது மொழிபெயர்ப்பு பதிவில்  ‘மேயர்’ என்றே குறிப்பிட்டு விட்டது.   

ஒரு படத்தைப்பார்க்காமலே, விக்கிப்பீடீயாவை காப்பியடித்து எழுதும் 
 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் மற்றவர்களையும் காப்பி... காப்பி... என எழுதி 
குற்ற உணர்ச்சியை களைந்து கொள்கிறது.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் தான் செய்யும் தில்லுமுல்லுகளை மற்றவர்களும் செய்வார்கள் என்றெண்ணுகிறது.
எனவேதான், 
தமிழ்ப்பட இயக்குனர்கள்,நடிகர்களை காப்பி...காப்பி என எழுதித்தள்ளி தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் மற்றப்பதிவுகளை ஆய்வு செய்தால் இன்னும் காப்பி ரகசியங்கள் வெளிப்படலாம்.
இனி  ‘காப்பித்திலகம்’ கருந்தேள், 
காப்பி என வாயைத்திறந்து பாடாது.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் செய்யும் மற்றொரு அராஜகம்...
பதிவர் ஜாக்கி சேகரை தொடர்ந்து ‘ஓட்டும்’ இந்த வீராதி வீரர்கள்.... 
 ‘சின்மயி விவகாரத்தில் கைது’ என்ற செய்தி வந்ததுமே பம்மி விட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வந்ததும் வீரம் முளைத்து விட்டது.
மீண்டும்  ‘ஓட்ட’ ஆரம்பித்து விட்டார்கள். 

இதோ... ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் மற்றொரு சாகச பம்மல்...
 ‘காரெக்டர்’ [ Character \ 1997 \ Dutch & Belgiam \ Directed by Mike Van Diem ] என்ற படத்துக்கு  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் பதிவெழுதியபோது, நான் பின்னூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டேன்.
படத்தின் கதாநாயகன் தனது தந்தையை கொலை செய்தானா ? இல்லையா ?
இன்று வரை அதற்கு பதில் இல்லை.
ஏன் சொல்ல முடியவில்லை ?
சினிமா மொழி தெரிந்தால் மட்டுமே அதற்கு விடையளிக்க முடியும்.

சாரு மட்டுமல்ல...அந்த கோஷ்டிக்கே சினிமா தெரியாது.
எல்லாமே அரைவேக்காடு ஜல்லிகள். 

இனி  ‘காப்பித்திலகம்’ கருந்தேளுக்கு பதில் எழுதி, 
தரம் தாழ விருப்பமில்லை.


 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் செய்கைக்கு... 
பட்டுக்கோட்டையார் பாடல் அப்படியே பொருந்தி வருகிறது.
பாடலை காணொளியில் காண்க...  




‘காப்பித்திலகம்’ கருந்தேள் என்கிற ராஜேசுக்கு ...குட் பை


நண்பர்களே...அடுத்து  ‘ஹேராம்’ பதிவில் சந்திப்போம்.