Dec 28, 2012

2012 சிறந்த இயக்குனர் யார் ?


நண்பர்களே...
2012 ல் அறிமுக இயக்குனர்களில் முத்துகள் மூன்றாக ஜொலித்தது...
1  ‘காதலில் சொதப்புவது எப்படி?’ பாலாஜி மோகன்.
2  ‘பிஸ்ஸா’ கார்த்திக் சுப்புராஜ்.
3 ‘நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பாலாஜி தரணீதரன்.
இவர்கள் மூவரையுமே சம அந்தஸ்தில் கொள்ள வேண்டும்.
2012 ல் மிகச்சிறந்த அறிமுக இயக்குனர்களாக மூவரையுமே பாராட்டி வாழ்த்துகிறேன்.
அடுத்தப்படத்தை சிறப்பாக உருவாக்கி... ‘மிகச்சிறந்த அறிமுக இயக்குனர்கள்’ என்ற பதவியிலிருந்து பிரமோஷன் ஆகி  ‘மிகச்சிறந்த இயக்குனர்கள்’ என்ற பதவியை அடைவது அவர்கள் கடமை.


போன பதிவில் குறிப்பிட்டபடி 2012ல் உலகசினிமா தரத்தை நோக்கி பயணித்தது வழக்கு எண் 18 \ 9 & நீர்ப்பறவை மட்டுமே.
நீர்ப்பறவை இயக்குனர் சீனு ராமசாமியை,
2012ன் மிகத்துணிச்சலான இயக்குனர் எனச்சிறப்பாக பாராட்ட வேண்டும்.
ஏனெனில் அவரது படத்தில் இரண்டு கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
1. மதுவின் தீமை
2. சிங்கள் ராணுவத்தால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்.
இக்கருத்தை,
ஆழமாக சொல்லவில்லை...
அகலமாக சொல்லவில்லை...
குட்டையாக சொல்லவில்லை என நொள்ளை நொட்டை சொல்பவர்கள்
தயாரிப்பாளர் யார் என கவனத்தில் கொள்ளவேயில்லை.
‘கலைஞரின் பேரன்’ தயாரித்தப்படத்தில் இக்கருத்தை சொல்லியதற்கே
சீனு ராமசாமியை பாராட்ட வேண்டும்.
ஹிட்லரின் தயாரிப்பில்  ‘யூதப்படுகொலையின் பயங்கரத்தை’ சித்தரிப்பதற்கு
ஆண்மை,ஆளுமை இரண்டுமே வேண்டும்.
சீனு ராமசாமியிடம் இரண்டுமே இருப்பதை நீர்ப்பறவையில் பார்க்கலாம்.
எனவே சீனு ராமசாமியை 2012ன் மிகத்துணிச்சலான இயக்குனர் எனப்பாராட்டி வாழ்த்துகிறேன்.



சீனு ராமசாமியை  தனிப்பிரிவாக்கி பாராட்டி விட்டதால்,
2012ன் மிகச்சிறந்த இயக்குனராக,  ‘பாலாஜி சக்திவேல்’ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/ 9 என தனது எல்லாப்படங்களிலுமே சமூக அக்கறையை வெளிப்படுத்தி உள்ளார்
பாலாஜி சக்திவேல்.
 ‘வழக்கு எண்ணில்’ சற்று உக்கிரமாக தனது அக்கறையை பதிவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

கருத்து சொன்னாலே, வசூலில் காயடித்து விடுவார்கள் தமிழ் ரசிகர்கள்.
ஓ.கே...ஓ.கே..., மசாலா ஃகபேக்கு கொட்டியதைப்போல கலெக்‌ஷனை
கொட்ட வேண்டாம்.
பிஸ்ஸாவுக்கு தந்த வசூலையாவது தந்து கவுரவித்திருக்கலாம்
தமிழ் ரசிகர்கள்.

ஆனால் பாலாஜி சக்திவேல் தெளிவாக உள்ளார்.
மக்களுக்கான சினிமாவை தொடர்ந்து கொடுப்பதில் உறுதியாக உள்ளார்.
காட்பரிஸ் சாகலேட்டுக்குள்  ‘சுக்கு,திப்பிலி,மிளகு’ சேர்த்து கொடுக்கும் கொள்கைக்காகவே அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.
ஷங்கர் பட ரசிகர்களுக்கு,  ‘பதேர் பஞ்சலி’ கருத்தைச்சொல்லும்
செப்படி வித்தைக்காரர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

2012ன் சிறந்த இயக்குனராக பாலாஜி சக்திவேலை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.


சிறந்த இயக்குனரின் படம்... சிறந்த படமாகத்தானே இருக்க முடியும்.
எனவே, 2012ன் சிறந்த படம்  வழக்கு எண் 18 \ 9.
அதற்குரிய காரண காரியங்களை அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

2 comments:

  1. 2012-ல் தமிழ்த்திரைப்படங்கள்
    http://multistarwilu.blogspot.in/2012/07/2012.html

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி

    Cinema News

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.