Mar 9, 2013

விசிலடிக்கும் கல்லூரிப்பெண்கள்.


நண்பர்களே...
நேற்று குமர குரு பொறியியல் கல்லூரிக்கு சென்றேன்...முதன் முறையாக.
பெங்களூரூ விதான் சவுதாவை பிரதியெடுத்த பிரம்மாண்ட கட்டடம்தான் வரவேற்றது.
உள் அழகு இன்னும் மிரட்டியது.
இங்கு படிப்பவர்கள் சொர்க்க லோகம் போனால் மிரள மாட்டார்கள்.
எங்கு பார்த்தாலும் தேவதைகள்...கண்களை வதைத்தார்கள்.

மகளிர் தினமும்... ‘பெண்களைப்போற்றும்’ ஐரோப்பிய திரைப்பட விழாவும் ஒரே நாளில் அமைந்தது இனிய பொருத்தமே !
அரங்கு நிறைந்த மாணவக்கூட்டத்தை பார்த்து அதிசயித்து போனேன்.
சேவல்களை விட மயில்கள் அதிகம்.இது மற்றொரு அதிசயம்.

விழாவை ஆங்கிலத்திலேயே தொடங்கி... ஆங்கிலத்திலேயே முடித்தார்கள்.
படத்தை பற்றிய குறிப்பை எல்லோருக்கும் வழங்கி விட்டு...அதை மைக்கில் வாசித்தது வேஸ்ட்.
அதன் தமிழாக்கத்தை வாசித்தது மற்றொரு வேஸ்ட்.

விளக்கை அணைத்ததும் விசிலும்...ஆரவாரமும் வெடித்தது.
முன் வரிசையில் இருந்த நான் திரும்பி பார்த்தேன்.
மயில்கள் விசிலடிப்பதை தரிசித்தேன்.
என்னா அழகா அடிக்குதுங்க...
எம்.ஜி.யார் ரசிகர்கள் டெப்பாஸிட் இழந்து விடுவார்கள்.
விசிலடிப்பது பகுதி நேர வகுப்பாக இருந்தால்...நானும் விண்ணப்பிப்பேன்.


ஸ்லோவாக்கியா நாட்டின்  ‘த ஹவுஸ்’ திரைப்படம்தான் பிள்ளையார் சுழி.
முதல் படமே...பட்டாஸ்.
சத்தியமா சொல்றேன்.
எண்பது லட்சம் போதும்...இப்படத்தை எடுக்க.
எங்கேயாவது பணத்தை கொள்ளையடிச்சாவது இப்படத்தை எடுக்கணும்னு  ‘டெம்ட்’ ஆயிருச்சு.
‘காப்பியடிச்சு எடுத்திருக்கான்னு’ பெங்களூர் கோஷ்டி பதிவெழுதுனாலும் பரவாயில்லை.


பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்திற்கு இணையானது இப்படம்.
ஆனால் பல்வேறு தளங்களில் இப்படம் பயணித்திருக்கிறது.

பெண்களின் அகப்போராட்டத்தை அற்புதமாக சித்திரித்து உள்ளது.
பெண்ணியம் பேசும் கோவைப்பெண் வீராங்கனைகள் ஒருவர் கூட இவ்விழாவிற்கு வரவில்லை.
எல்லோரும் ‘சரவணன் மீனாட்சியில்’ பிஸியாகி விட்டார்கள் போலும்!

43 லட்சம் கோவை ஜனத்தொகையில் மொத்தம் பத்து பேர்தான் இவ்விழாவிற்கு வந்திருந்தனர்.
அனைவருமே கோணங்கள் பிலிம் சொசைட்டி தீவிரவாதிகள்.

படத்தை திரையிட்ட  ‘மாணவ ஆப்ரேட்டர்’ சென்சாரில் இருக்க வேண்டியவன்.
ஸ்கர்டை கழட்டுவதற்குள் ‘டிஜிடல் புரஜக்டர்’ வீடியோ& ஆடியோவை ம்யூட் பண்ணி விடுகிறான்.
அந்த கேப்பில் மாணவர்கள் அடிக்கும் கமெண்ட்...அது தனி அட்டகாசம்.
‘பொழைச்சு போங்கன்னு’  ‘லிப்லாக்கை’ மட்டும் அனுமதித்தான்  ‘சென்சார்’.
நேற்று எத்தனை பேர் டவுண்லோடினார்களோ தெரியாது.
நான் பண்ணி விட்டேன்.

அடுத்தப்பதிவு...  ‘த ஹவுஸ்’ விமர்சனம்தான்.
காத்திருக்கவும்.

4 comments:

  1. கண்களை வதைத்ததால் விமர்சிக்கவில்லையோ...?

    Waiting...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.
      இரண்டையுமே தனித்தனி பதிவாக்குவதுதான் அழகு.

      நிகழ்ச்சியைப்பற்றி பதிவெழுத சைட் அடிக்கும் இளைஞனாக மாறினேன்.
      படத்தைப்பற்றி எழுதும் போது ஒரு பெண்ணுக்கு தகப்பனாக எழுத வேண்டி உள்ளது.
      பட விமர்சனம் படிக்கும் போது உங்களுக்கே தெரிய வரும்.

      Delete
  2. மயில்கள் விசிலடிப்பதை தரிசித்தேன்..//

    நண்பர் ஜீவா கொஞ்ச நாள் அம்மணிகள விட்டு வச்சிருந்தார்.. அந்த காத்து உங்க பக்கமா வீசிடுச்சு போல ?? ;-)

    ReplyDelete
    Replies
    1. அம்மணிகள் விஷயத்தில் நான் சீனியர்.
      கோவை நேரம் ஜீவா ஜூனியர்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.