May 9, 2013

கேபிள் சங்கரை வெற்றிகள் தொடரட்டும்.


நண்பர்களே...
கேபிள் சங்கர் அவர்கள் இயக்குனராகி விட்ட செய்தியை பேஸ்புக்கில் பார்த்தேன்.
கேபிளோடு ஒரே ஒரு தடவை, போனில் மட்டுமே பேசியுள்ளேன்.
நீண்ட கால நண்பரோடு உரையாடியதை போல்,
மிக நெருக்கமாக  உணர்ந்தேன்.
அவர் இயக்குனராகி விட்ட செய்தி, மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.
அவருடைய கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பதிவுலகில் பிரபலமான ஒருவர், இயக்குனராகி வழிகாட்டி இருக்கிறார்.
சுந்தர் சியிடம் கற்ற வித்தை நிச்சயம் பலனை தரும்.
கேபிளின் படம், கல்லா கட்டும்.
வாழ்த்துக்கள்.

எனது  ‘திரைக்கதை ரெடி’ பதிவை படித்து விட்டு பதிவுலக நண்பர்கள் வாழ்த்துக்களை வாரி வழங்கி விட்டார்கள்.
 ‘கருந்தேள்’ கூட பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்திருப்பதாக,
எனது நண்பர்  ‘கோணங்கள்’ ஆனந்த் கூறினார்.
[ என்னால் ராஜேஷ் பேஸ்புக் செய்திகளை படிக்க முடியாது ]
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

உங்களது வாழ்த்தில் இருக்கும் நம்பிக்கைக்கு,
தகுதி உடையவனாக  இருப்பேன்.
அதற்காக உழைப்பேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

10 comments:

  1. உங்களுக்கும் கேபிளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா.

      கேபிள் ஜெயிக்க வேண்டும்.
      அப்போதுதான் பதிவர்கள் பற்றி தயாரிப்பாளர்கள் மத்தியில் நல் அபிப்ராயம் உருவாகும்.
      இப்போது குறும்பட இயக்குனர்களுக்கு திரை உலகில்
      முதல் மரியாதை.

      Delete
  2. கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.... புதிய வெற்றிகளை அடையட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அன்புத்தம்பிகளின் அடைமழை வாழ்த்தில்,
      கேபிளின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

      நன்றி.

      Delete
  3. Replies
    1. உங்கள் வாழ்த்து கேபிளுக்கு உரமாகும்.
      நன்றி.

      Delete
  4. இயக்குனர் மகேந்திரன் கூறியதாக கேள்வி 'சினிமா துறையில் இயக்குனர் ஆகவேண்டும் என்று ஆசைப்படும் நபர் யாராக இருப்பினும் அவருக்கு தற்கால சினிமாத்துறையின் மீது சிறிதளவேனும் எரிச்சலும் ,கோபமும் இருக்கவேண்டும் அப்போதுதான் அவர்களிடமிருந்து வரும் படைப்பு நல்ல படைப்பாக இருக்கும்'என்று.பதிவுலகத்தாருக்கு கொஞ்சமல்ல நிறையவே கோபம் இருக்கும் ஆக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் சார் உங்களுடைய படைப்பிற்க்கும் கேபிள் சங்கர் அவர்களின் படைப்பிற்கும்.பிறகு உங்களுடைய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற விண்ணப்பித்திருந்தேன்.மறந்துவிடாதீர்கள் சார்.

    ReplyDelete
  5. Copy paste Instartion இல்லாமல் 100 படங்கள் இயக்க வணக்கங்கள் ஆயிரம்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கேபிள் சங்கர்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி தலைவரே..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.