Jan 6, 2014

பாதைகள் காத்திருக்கின்றன !.


நண்பர்களே...
கோணங்கள் பிலிம் சொசைட்டி 2014 துவக்க விழா படமாக ‘த ஸ்ட்ரெயிட் ஸ்டோரி’ என்ற காவியத்தை திரையிட்டு கொண்டாடி விட்டது.
இயக்குனர் ‘டேவிட் லிஞ்ச்’ பார்வையாளர்கள் மனதில் ‘மனிதம்’ பூக்க வைக்கிறார் இப்படத்தின் மூலம்.
மனித நேய பிரஷ்ஷால்,‘மானுடம் வெல்லும்’ என்ற ஓவியத்தை வரைந்து  இருக்கிறார் ‘டேவிட் லிஞ்ச்’.


The Straight Story | 1999 | USA | 112 min | Directed by : David Lynch.

நம்மிடையே வாழ்ந்து மறைந்த 73 வயது  ‘இளைஞர்’ ஆல்வின் ஸ்ட்ரெய்ட்
[ Alvin Straight ] என்பவரது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதியை படமாக்கி காட்டி இருக்கிறார் டேவிட் லிஞ்ச்.
தனது சகோதரன் ‘ஸ்டோரோக்’ வந்து நோயாளியாகி விட்டான் என்பதை கேள்வியுற்றதும்  பயணப்படுகிறார் ஆல்வின்.



வயோதிகம் தந்த பரிசுகள் உடம்பில் இருக்கிறது.
உடலில்  ‘தள்ளாமையும்’, மனதில் ‘அச்சமில்லாமையும்’ இருக்கிறது.
 ‘இருவரின் துணையோடு’ 270 மைலை கடக்க முடியும் என நம்புகிறார்.
1.  ‘துணிவு’.
2. மணிக்கு 5 மைல் வேகத்தில், லாந்தும் ‘லான்மோயர்’ [ Lawnmower ] .
துணிந்தவனுக்கு, ‘270 மைலும்’ பஞ்சு மெத்தைதான்.
இல்லாதவனுக்கு, இருக்குமிடமே தூக்கு மேடைதான்.


‘டேவிட் லிஞ்சின்’ சித்தரிப்புகள்தான் இந்த பயணப்படத்தை
‘உலக சினிமாவாக்கி’ இருக்கிறது.
மானிடத்தின் பல்வேறு முகங்களை இப்பயணத்தின் ஊடாக நாம் தரிசிக்கிறோம்.




பயணங்கள் மகத்தான மனிதர்களை நமக்கு பரிசளிக்கிறது.
‘மோட்டார் சைக்கிள் பயணம்’ தந்த ‘பரிசை’ மறக்க முடியுமா?

இப்படத்தை பள்ளிகளில் திரையிடுங்கள்...
 ‘ஏட்டுச்சுரைக்காய்கள்’ கற்றுக்கொடுக்காததை இந்த ஒரு படம் கற்றுக்கொடுக்கும்.

நண்பர்களே...
திட்டமிடுங்கள்..
பயணப்படுங்கள்...
பாதைகள் காத்திருக்கின்றன.



லாந்தும் = நடக்கும் [ நெல்லை தமிழ் ] 
 “அவன் என்னடே...இங்கேயே லாந்திகிட்டு இருக்கான்”.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.