Feb 22, 2014

ஆஹா கல்யாணம் = ஜில் பியர் & ஒயின் .


ஐஸ் பாக்சில் தவமிருக்கும்,  ‘ரிவெய்ரா ஒய்ட் ஒயின்’...
பீரிஸரிலிருந்து புறப்பட்டு வந்த,  ‘ஹைனிகெய்ன் பியர்’...
இரண்டும் கலந்த கிளாஸ், கையில்...

கரகர...மொறுமொறு...நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி...
குச்சியில் சொருகிய ‘சீஸ் பைனாப்பிள்’...
இரண்டும் மாறி மாறி, வாயில்...

பனி விழும் மலர் வனம், ஆங்காங்கே...
பார்வைக்கு வரம் தரும் தேவதைகள், எங்கெங்கும்...

‘போஸ் ஸ்பீக்கரில்’...
‘உல்லாசம் ஆகவே...
உலகத்தில் வாழவே’
என  ‘சந்திரபாபு’ துடிக்க...

ஐம்பது வயது...
இடுப்பில் எம்.ஆர்.எப் டயர் இருந்தாலும்...
சிந்தனையில், பிரபுதேவாவாகி...
இடுப்பை அசைத்தாடும், பீலிங் வரும்.
‘ஆஹா கல்யாணமும்’ இத்தகைய அனுபவத்தை தருகிறது.

உள்ளூர்க்கார கதிர்வேலன், பிரம்மன் எனும் ‘பிக்பாக்கெட்டுகள்’,
நம்பி வந்த ரசிகனை பிளேடால் கீறுகிறார்கள்.
வடக்கத்தி யஷ்ராஜ் சோப்ரா, வணிக சினிமாவுக்குரிய இலக்கணத்தை,   அணுஅணுவாக இழைத்து, திரைக்கதையை நெய்திருக்கிறார்கள்.

கதாநாயகனின்  ‘தெலுங்குத்தமிழையும்’...
கதாநாயகியின்   ‘சின்மயத்தமிழையும்’....
ரசிக்க வைத்தது ‘திரைக்கதையே’.


கதாநாயகி ‘வாணி கபூரை’ பத்தி நாலு வார்த்தை சொல்லவில்லையென்றால், ‘கட்டை வேகாது’.
 “ தேக்கு பாதி...கேக்கு பாதி...கலந்து செய்த கலவை நான்” என வந்திருக்கும் வாணி கபூரை வாழ்த்தி வரவேற்போம்.


தொப்புளை சுத்தி நான்கு திசைகளிலும்,
‘முழம் ஏரியாவை’ காலியா காமிச்ச காஸ்ட்யூமரை ஸ்பெஷலா பாராட்டியே தீரணும்..
காஸ்ட்யூமர் வடிவமைத்த ‘கவர்ச்சி மைதானத்தில்’ எழும் காந்தப்புயல்,
ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் அலைக்களிக்கும்.
‘இந்த ஏரியாவை காட்டி’ அதகளம் செய்து கொண்டிருந்த ‘ஸ்ரேயா’, பாட்டியாகி விட்டதால்...
‘வாணி கபூரை’ பார்ட்டி கொடுத்து வரவேற்கும் தமிழகம்.


'லிப்லாக்’ ,   ‘திருமணத்துக்கு முந்தைய உடல் உறவு’ என அழகிய அத்துமீறல்கள்...
 ‘திரைக்கதை பாயாசத்தில்’  ‘இந்திரன் தோட்டத்து முந்திரியாய்’ இணைந்திருந்து ருசிக்கிறது.
[ சிறுவர்களை தவிர்த்து,இப்படத்தை பார்க்கச்செல்லவும்.]

தொழில் பக்தியும்,செய்நேர்த்தியும் இருப்பதால்,
 ‘வடக்கத்தி உணவை’ உண்டு வாழ்த்துவோம்.